ஐரோப்பிய யூனியன்
ஐரோப்பிய ஒன்றியம்
(European Union அல்லது EU) என்பது தற்பொழுது 27 உறுப்பு
நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச்
ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக்
கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச
வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு வெளிநாட்டலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக
அமைப்பு, ஜி8 உச்சி
மாநாடு, ஐக்கிய நாடுகள்
சபை என்பவற்றிலும் சார்பாண்மை
(representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென்
ஒப்பந்தத்தின் (Schengen
Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கப்பாடு, அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய
ஆணையம், ஐரோப்பிய
நாடாளுமன்றம், ஐரோப்பிய
ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய
நீதிமன்றம், ஐரோப்பிய
மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.
1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய
நிலக்கரி மற்றும் உருக்கு
சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம்
ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.
வரலாறு
இரண்டாம் உலக மகாயுத்தம் ஐரோப்பாவை அரசியல்,
பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தியது. இதுநாள் வரை உலக அதிகாரத்தை தன்வசம் கொண்ட
நிலையில் இருந்து அது தளர்ந்தது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் ஐரோப்பாக் கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்கு, ஏகாதிபத்திய அதிகாரமும் மட்டுபடுத்தப்பட்டது. கைத்தொழில், பொருளாதார
ரீதியில் மிகக்கடுமையான பாதிப்புக்கு உள்ளான போதும் இந்த நாடுகள் தாமாகவே தம்மை
மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய சாத்தியப்பாடு இன்றி காணப்பட்டது.அமெரிக்க மார்ஷல்
திட்டம் ஐரோப்பாவை கட்டி எழுப்புவதற்கு பல கடனுதவிகளை வழங்கியது. பிராந்தியவாத
அபிவிருத்தியானது பிரான்சினால் வேறு ஒரு கோணத்தில் மேற்கொள்ளப்பட்டது.
பிரான்சிய வெளிநாட்டு அமைச்சரான Robert
Schuman என்பவரால் 9 May
1950இல் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் முன்மொழியப்பட்டது. பிரான்ஸ்,
மேற்கு ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, லக்ஸ்சம்பெர்க் ஆகிய நாடுகளை
ஒன்றிணைத்து . ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது "ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி" என அறிவிக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக இதே நாடுகள் இணைந்து ஐரோப்பிய
எரிசக்தி தாபனத்தையும் ஆரம்பித்தன. இந்த நாடுகள் சிறப்பாக செயற்பட்டதன் விளைவாக
இந்த நிறுவனங்கள் வெற்றிப்பாதையை நோக்கி நகர்ந்தன. இதன் விளைவாக
அங்கத்துவ நாடுகளை அதிகரித்துக்கொண்டு 1957இல் ஐரோப்பிய பொருளாதார சமூகம் ( European Economic Community) என்ற பெயரில் தங்களை ஒருங்கே இணைத்துக்கொண்டன. பொருளாதார
ஒத்துழைப்பின்னூடாக பொருளாதார அபிவிருத்தியை அடைவது இத்தாபனத்தின் நோக்கமாகும். மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய
அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின.
EEC உறுப்பு நாடுகளின் பொருளாதாரங்களை ஓர் ஒற்றைப்
பொதுச்சந்தையாக மேம்படுத்தவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கூட்டமைப்பை
வளர்க்கவும் Rome Treaty மூலம் உருவாக்கப்பட்டது. EEC உறுப்பினரல்லாத நாடுகள் தொடர்பாக ஒற்றை வணிகக்
கொள்கையை உருவாக்கவும், போக்குவரத்து முறைகள், வேளான் கொள்கைகள், பொதுவான
பொருளாதார கொள்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவும் முயன்றது. மேலும் தடையற்ற
போட்டியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நீக்கவும், உறுப்பினர் நாடுகளிடையே
தொழிலாளர், மூலதனம் மற்றும் தொழில்முனைவோர் தாரளமாக இடம்பெயர்ந்து செல்வதை உறுதி
செய்யவும் முயன்றது. 1993இல் இது ஐரோப்பிய யூனியன் என பெயர்மாற்றம் பெற்றது.
நாடுகளின் அங்கத்துவம்
1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் நோர்வேயும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.போர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென்
ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை
ஐரோப்பியச் சட்டமூலம் (Single
European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.
1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன்
கட்டளைவிதி (Copenhagen
criteria) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் யூரோவலயம் 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சிலோவேனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.
2007 ஜனவரி 1 ஆம் தேதி ருமேனியாவும், பல்கேரியாவும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன ஐரோப்பிய
அரசியலமைப்புக்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 27 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது. இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் என்பவை.குரோசியா, மசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொஸ்னியாவும்
ஹெர்சகொவினாவும், மான்டனீக்ரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.
ஐரோப்பிய யூனியனின்
அரசியல்
அரசாங்கம்
ஐரோப்பிய யூனியன் ஆனது ஏழு நிறுவங்களைக்
கொண்டுள்ளது. அவை:-
·
European parliament
·
Council of European union
·
European commission
·
European council
·
E. central bank
·
Court of justice
·
E. court of auditors.
சட்டத்துறை நுண்ணாய்வு, சட்ட சீர்திருத்த வேலைகள் European parliament, Council of eu க்கும் இடையில்பிரித்து கொடுக்கப்படுகிரது. நிர்வாக வேலைகளை European commission நிறைவேற்றுகின்றது. Council of eu க்கு வரையறுக்கப்பட்ட ஆற்றலே காணப்படுகின்றது. Euro zone இன் அன்னிய செலவாணி கொள்கைகள் European central bank மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய யூனியனின் சட்டங்களுக்கு விளக்கமளிப்பது, துணைப்பகுதிகளை செயற்படுத்தி ஆலோசனை
வழங்குவதும் Court of
justice ஆகும்.
European council
European council ஆனது euக்கு வழிகாட்டுகின்றது. வருடத்திற்கு 4 தடவை கூடும். President of eu council , president of the
commission , member state இன் பிரதிநிதிகள் ஒவ்வொருவர் வீதமும் கொண்டது. இதுவே head of government ஆகும். European
council ஆனது யூனியனின் உயர் அரசியல் அதிகாரம் பெற்றது.
இது உடன்படிக்கயில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும், ஐரோப்பிய
யூனியனின் கொள்கை திட்டத்தையும் ராஜதந்திரத்தையும் வரையறுக்கும்.
ஐரோப்பிய யூனியனது தலைமைத்த்துவ நிலையை ஒழுங்குபடுத்தல், member state க்கு இடையிலான அரசியல் குழப்பங்கள்,உட்பூசல்கள்
என்பவை பற்றி விவாதித்தல், நிறுவனங்களையும் அதன் கொள்கையையும் ஒழுங்குபடுத்தல்
இதன் வேலையாகும். இதன் சட்டங்கள் வெளிப்படையாகவும் கூட்டாகவும் head of state இனால் உருவாக்கப்பட்டது.
மேலும் முக்கியமான ஆவணங்களுக்கு சட்டரீதியில் ஒப்புதல்
அளிக்கும். (சர்வதேச உடன்படிக்கை , ஒப்பந்தம்)
· 19th November 2009 ல் Hermanvan
Rompuy என்பவர் European council ன் முதலாவது நிரந்தர ஜனாதிபதியாக தெரிவானார். உறுதியானதும்
வெளிப்படையானதுமாக இவர்களின் பதவி இருக்க வேண்டும். அங்கத்துவ நாடுகளுக்கு
இடையிலான ஒருங்கிணைப்பு
· ஏற்படுத்துவது இவர் கடமை பெரும்பான்மையோர் ஆதரவின் மூலம் இவரை பதவி நீக்கலாம்.
European Commission
European commission ஆனது EUஇன் நிர்வாகத்திற்கு பொறுப்பாகவுள்ளது. சட்டத்தை
தொடக்கிவைத்தல், EUஇன் நாளாந்த செயற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும்
முழு ஐரோப்பாவையும் இயக்கும் ஒன்றாக commission காணப்படுகின்றது. கபினட் அரசாங்கத்தை செயற்படுத்தல் இதன் கடமை ஆகும். வித்தியாசமான
கொள்கைகளுக்காக 27
commissioners ஒவ்வொரு அங்கத்துவ நாடுகளில் இருந்து
பிரதிநிதியாக உள்ளனர். EUஇன் நலனை பிரதிநிதிததுவப்படுத்த
கடமைப்பட்டுள்ளனர்.
இந்த 27 பேர்களுள் ஒருவர் president of commission ஆக EUஆல் நியமிக்கப்படுவார்.ஜனாதிபதிக்கு பின் commissioner என்பவர் யூனியனின் வெளிநாட்டு விவகாரம்,
பாதுகாப்பு கொள்கையின் உயர் பிரதிநிதியாக இருப்பார் Eu ஆல் தெரியப்படும் இவர் vice president of commission ஆவார். மற்றய 25 அங்கத்துவர்களும் Council of eu ஆல் தெரியப்படுவர். ஒப்பந்தங்கள் president ஆல் முன்மொழியப்படும். இவ் 27 பேரும் European parliament இல் வாக்களிக்க முடியும்.
பாராளுமன்றம்
ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்றம் Eu தொடர்பான சட்டங்களை உருவாக்கும். Euன் சட்டத்தை உருவாக்குவதில் ஐரோப்பிய பாராளுமன்றதிற்கு
பாதி பங்குண்டு (மீதி council க்கு உண்டு) இதில் 736-751 அங்கத்தவர்கள் உள்ளனர். இவர்கள் EUஇன் பிரஜைகளால்
நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றனர். இதன் பதவிக்காலம் 5 வருடமாகும்.ஒவ்வொரு நாட்டின் உறுப்பினர்களின்
எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுகின்றது.அரசியல் கட்சிகள் பெறும்வாக்கு
விகிதத்தின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் இடம்பெறும். அங்கத்தவர்கள் தேசிய
அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
தலைவர் மற்றும் 14 துணைத்தலைவர்கள் தலைமைப்பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றனர். பாராளுமன்றம்
அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குகின்றது. எந்த விடயத்தை பற்றியும் விவாதிப்பதற்கு
பாராளுமன்றுக்கு அதகரம் உண்டு. மாஸ்ட்ரிச் உடன்படிக்கை (1993) இன் பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள்
விரிவடைந்தன. பொருளாதார ஒருங்கிணைப்பு, வரவு செலவுக்கொள்கை தொடர்பான முடிவுகளில்
ஆணை செய்யும் அதிகாரமுடைய இது மந்திரி சபையின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகவே
நீடிக்கிறது. Uk, USA சட்ட சபையைப்போல் இது அதிகாரம் படைத்த அமைப்பு அல்ல.
ஐரோப்பிய யூனியனின் சாதாரண சட்ட செயற்பாடு
Eu parliament, eu council இணைந்து உருவாக்கும் சட்டம் அநேகமாக சாதாரண சட்ட
செயற்பாட்டுக்கு கீழே வரும். EUன் budget ஐ இது விண்ணப்பிக்கும். Commission பாராளுமன்றுக்கு முழுப்பொருப்பாகும்.
அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அல்லது திருப்பி அனுப்பும் அல்லது விமர்சனம்
செய்யும். ஐரோப்பிய பாராளுமன்றின் ஜனாதிபதி சபாநாயகரருக்கான பங்கையும்
வெளிப்படுத்த்துவார். இந்த பிரதிநிதித்துவம் வெளிப்படையானது ஆகும்.
Council
Council of EUஆனது சட்டத்துறையின்
பாதி வடிவமாகும் ஒவ்வொரு அங்கத்துவ அரசுகளும் இணைந்த அரசாங்க மந்திரிகளைக் கொண்ட
சபை இதுவாகும். வித்தியாசமான பல்வேறு கொள்கைகளை பொருத்து இதன் உரையாடல்இடம்பெறும்.
இது வித்தியாசமான வடிவங்களை கொண்டமைந்தாலும் ஒரு தனிச்சபையாகவே நோக்கப்படுகின்றது.
இதன் மேலாதிக்க சட்ட செயற்பாடாக பாதுகாப்பு , நிர்வாக செயற்பாடு, வெளிநாட்டு
கொள்கையை தொழிற்படுத்தல் போன்றவை ஆகும்.
ஐரோப்பிய யூனியனின் Budget
27 அங்கத்துவ நாடும் 2007 க்கான budgetஆக 120.7 billion
யூரோவை நிர்ணயித்தது. 2007-2013 காலப்பகுதிக்காக 864.3 billion யூரோவை budgetஆக நிர்ணயித்தது. Budgetல் ukஇன் 2004இற்கான செலவு மதிப்பீடு 759billion யூரோவாகும். franceஇன் செலவுத்தொகை மதிப்பீடு 801billion யூரோவாகும்.1960ல் EECன் budgetஆனது GDPல் 0.03%ஆகும்.
2010இற்கான budgetஆனது 141.5billionயூரோவாகும் இதில் 45%மான பகுதி கூட்டாக
நிர்ணயிக்கப்பட்டதாகும். கிட்டத்தட்ட 31% விவசாயத்திற்கும், Rural Development ,Environment, fisheriesஇற்கு 11%மும் Administrationஇற்கு 6%,Global partner, குடியுரிமை,சுதந்திரம்,பாதுகாப்பு, நீதித்துறைக்காக 69%மும் மீதி 1% முறையான செயற்பாடுகளுக்காக பயன்படுகின்றது.
ஐரோப்பிய நிதித்துறை ஆய்வாளர்களின் குறிக்கோள் EUஇன் budgetஇல் கணக்கீடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா
என்பதை உறுதிப்படுத்தல் ஆகும். Courtஆனது ஒவ்வொரு
வருடத்தினதும் வருமான கணக்குகளை பரிசோதித்து
council, eu
parliamentஇற்கும் அறிக்கை சமர்ப்பிக்கும்.
பாராளுமன்றமானது commissionஆனது budget கையாள முடியுமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்யும் Courtஆனது
நிதி தொடர்பான சட்டங்களுக்கும், மோசடி செயற்பாடுகளுக்கு எதிராகவும்
முன்மொழிவு, அபிப்பிராயங்களை வழங்கும்.
ஐரோப்பிய நீதித்துறை ஆய்வாளர்கள் சட்டத்துறைக்கு
கடமைப்பட்டவர்கள் பாராளுமன்றம், councilக்கு கணக்குகள் பற்றி உறுதியான நம்பகமான
வாக்குமூலம் வழங்க வேண்டும். சட்ட ஒழுங்கு முறையின் கீழ் நிறுவன அறிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும். Courtஆனது unionஇன் தகுதியற்ற கணக்குகளுக்கு 1993இலிருந்து அனுமதி தராது. 2009இன் ஆய்வாளர் அறிக்கையின்படி யூனியனை ஐந்து
பகுதிகளாக பிரித்து செலவுகளை பகிர்ந்தளிதனர்.
ஐரோப்பிய யூனியனின் அதிகாரம்
ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் தனது அதிகாரத்தை Euக்கு வழங்கியுள்ளது. அனாலும் அங்கத்துவநாடுகள்
கொள்திரனற்ற பகுதிகளில் சில சட்டங்களை நிராகரிக்க முடியும். சிலபகுதிகளில் EUஇன் சட்டங்களை
அங்கத்துவநாடுகள் செயற்படுத்தும் EUஇன் சட்டங்களை Member state மட்டுமே சட்டங்களை காலநீடிப்பு செய்யமுடியும்.
தேசிய சட்டத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக EUஆனது வேற்றுகொள்கை கொண்ட பகுதிகளில்
ஒன்றிணைவைஏற்படுதல், ஆதரவுவழங்கள், பொருட்களுக்கான கேள்வியை குறைத்தல்
நடவடிக்கையில் ஈடுபடுகிறது. Euக்கும் அங்கத்துவநாடுகளுக்கும் இடையிலான
அதிகாரப்பகிர்வு மூன்று வகையாக இடம்பெறுகின்றது.
1)
தனிப்பட்ட அதிகாரம்
·
சுங்கவரி ஒன்றியம்.
·
உள்ளக சந்தையின் செயற்பாடுகளுக்கு தேவையான வலிமையான விதிகளை வழங்கள்.
·
யூரோநாணயத்தை புழங்கும் நாடுகளுக்கு நிதிக் கொள்கையை உருவாக்கள்
·
பொதுவான மீன்பிடி கொள்கையின் கீழ் கடல்உயிர்களை பாதுகாத்தல்.
·
பொதுவான வர்த்தகக்கொள்கையை மேற்கொள்ளல்.
2)
பங்கீட்டு அதிகாரம்.
I.
அங்கத்துவ நாடுகளால் பயன்படுத்த முடியாத யூனியனால் மட்டும் பயன்படுத்த
கூடியது.
·
உள்ளக சந்தை
·
உடன்படிக்கையில் சமூக கொள்கையையின் பண்புகளை வரையறுத்தல்.
·
பொருளாதார, சமூக ரீதியில் ஆள்புல கூட்டை ஏற்படுத்தல்.
·
விவசாயம் மற்றும் மீன்பிடி அதிகாரம்.
·
சூழல் விடயம்.
·
நுகர்வாளர் பாதுகாப்பு.
·
போக்குவரத்து
·
Trance- European network.
·
சக்திவளம்.
·
சுதந்திரம், பாதுகாப்பு, நீதி, பொது சுகாதாரம்.
II.
அங்கத்துவ நாடுகளால் பயன்படுத்தக்கூடியதும் யூனியனின் பயன்பாட்டை
கட்டுப்படுத்த முடியாததுமான அதிகாரம்.
·
தொழில்நுட்ப, விண்வெளி அராய்ச்சி அபிவிருத்தி.
III.
அங்கத்துவநாடுகளின் கொள்கைகளை செயற்படுத்த அல்லது நிறைவு செய்ய யூனியன்
வழங்கும் ஒத்துழைப்பு அதிகாரம்.
·
பொருளாதார, வேலைவாய்ப்பு, சமூகக்கொள்கையில் ஒத்துழைப்பை ஏற்படுதல்.
·
பொது வெளிநாட்டு, பாதுகாப்புக்கொள்கையை பேணுதல்.
3)
ஆதரவு வழங்கும் அதிகாரம்.
(அங்கத்துவ நாடுகளின் செயற்பாடுகளில் யூனியன்
ஆதரவு,ஒத்துழைப்பு வழங்குதல்)
·
மனித சுகாதாரத்தை பாதுகாத்தல்,உயர்த்தல்.
·
கைத்தொழில்,கலாசாரம்,சுற்றுலாதுறையை மேம்படுத்தல்.
·
கல்வி,இளைஞர்விளையாட்டு,தொழிற்பயிற்சி வழங்கள்.
·
சிவில்பாதுகாப்பு (இயற்கை அனர்த்தங்களை குறைத்தல்)
·
நிர்வாக ஒத்துழைப்பு.
ஐரோப்பிய யூனியனின் சட்ட ஒழுங்குமுறை
ஐரோப்பிய யூனியனானது உடன்படிக்கைகளின்
வரிசையின்அடிப்டையில் அமைக்கப்பட்டது. European council, European parliament என்பன உடன்படிக்கையின் சீர்திருத்த விளைவால்
உருவாக்கப்பட்டது. பரந்த கொள்கை கொண்ட உடன்படிக்கைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
நிறுவனங்களின் குறிக்கோளை அடையத்தேவயான சட்டதிகாரத்தை வழங்கும். இந்த அதிகாரம்
அங்கத்துவ நாடுகள் மற்றும் அதன் மக்களை நேரடியாக பாதிக்கும் சட்டங்களை
இயற்றமுடியாது. ஐரோப்பிய யூனியனானது சர்வதேச உடன்படிக்கைகள், ஒப்பந்தங்களை
சரியானதா என்று கணிப்பிட சட்ட ஆளுமை கொண்டது. அதிகர கொள்கையின்கீழ்
தேசியநீதிமன்றங்கள் சட்டமியற்ற, உடன்படிக்கைகளை அமுல்படுத்த அங்கத்துவநாடுகள்
அனுமதி வழங்கின. அது யாப்பின் முன்னேற்பாடாக இருந்தாலும் சரி தேசிய சட்டத்தில்
முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதிகளை நிராகரிக்கமுடியும்.
ஐரோப்பிய யூனியனின் அடிப்படை உரிமைகள்
ஐரோப்பிய யூனியன் மனிதஉரிமைகள் பற்றிய
ஏற்பாடுகளையும் கொண்டுள்ளது. அவை:-
·
மனித கௌரவத்திற்கு மதிப்பும் மரியாதையும் அளித்தல்.
·
சுதந்திரம்,ஜனநாயகம்,சமத்துவம்,சட்டவாட்சி, மனிதஉரிமைகளுக்கு மதிப்பளித்தல்.
(சிறுபான்மை இனத்திற்கும்)
·
பன்மைத்துவ சமூகத்திற்கு பாரபட்சம் காட்டாமை.
·
சகிப்புத்தண்மை,நீதி,ஒற்றுமை,ஆண்,பெண் சமத்துவத்தை ஏற்படுதல். ஆகும்
இது போன்ற அடிப்படைஉரிமைகள் 2009ஆண்டு Lisbon Treaty மூலம் பிரகடனபடுத்தப்பட்டது. 2009 Lisbon Treaty மூலம் ஐரோப்பிய யூனியனின் அடிப்படை
உரிமைப்பட்டயம் சட்டஅனுமதி பெற்றது. அடிப்படைஉரிமைகளானது ஐரோப்பிய யூனியனின்
சட்டத்துக்கு எதிராகவும் தீர்ப்புக்கூற முடியும். நீதித்துறையின் தீர்ப்புப்பெற்ற
உரிமைகள் அங்கத்துவ நாடுகளுக்கு பொதுவானது. அடிப்படைஉரிமைப்பட்டயம் 2000ஆம் ஆண்டிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்டது ஆகும். European Convention on Human Rights (ECHR) அங்கத்துவ நாடுகளின் நடைமுறை மரபாக இருந்து வருகிறது. EUஆனது மனிதஉரிமைகளை
அதிகரிப்பது பற்றிய விடயங்களை உலகளவில் பரப்பியுள்ளது. EU மரணதண்டனைக்கு
எதிராகவும் அதனை நிறுத்தவும் உலகளவில் செயற்படுகிறது. EUஇன் அங்கத்துவத்தை
ஏற்க மரணதண்டனையை நீக்கவேண்டும்.
ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு உறவுகள்
1957இல் community நிறுவிய
திகதியிலிருந்து அங்கத்துவநாடுகள் வெளிநாட்டுக்கொள்கை, கூட்டுறவு மற்றும் சர்வதேச
வர்த்தகம் என்பன பொதுவான வர்த்தக கொள்கையின் கீழ் இடம்பெறும். பரந்த கூட்டுறவு
நடவடிக்கையால் 1970ல் European Political Cooperation நிறுவப்பட்டதிலிருந்து
வெளிநாட்டு உறவுகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் அங்கத்துவ நாடுகளுக்கிடையில்
முறையற்ற கலந்துரையாடல் நீக்கப்பட்டு அனைத்தும் பொதுவான வெளிநாட்டு கொள்கையின்
கீழ் வந்தது. 1987ல் Single European Act மூலம் European Political Cooperation அறிமுகமானது. EPCஆனது Maastricht Treaty மூலம் Common Foreign and Security Policy (CFSP) என பெயர்மாற்றம்
பெற்றது. CFSPஇன் குறிக்கோள் Euஇன் தனிப்பட்ட நலனை, சர்வதேச சமூகத்தின் நலனை
அதிகரித்தலோடு சர்வதேச ஒத்துழைப்பு, மனித உரிமைகளை அதிகரித்தல், ஜனநாயகம், சட்டவாட்சியை
ஏற்படுதல் ஆகும். CFSPஇன் கீழ் ஏற்படும்
கருத்து முரண்பாடுகளை தீர்ப்பது கடமையாகும். (ஈராக் யுத்தத்தின் போது ஏற்பட்டது)
ஐரோப்பிய யூனியனானது எல்லா G8
,G20 மகாநாடுகளில் பங்கேற்கிறது. CFSP ஐரோப்பிய யூனியனின்
வெளிநாட்டு விவகாரம், பாதுகாப்பு கொள்கைபற்றி விளக்குகின்றது.
EUஇன் உள்ளக செயற்பாட்டு சேவையான European External Action Service (EEAS) எபோதும் விழிப்பாக இருக்கும் உயர்பிரதிநிதிதத்துவம் கொண்ட EUஇன் தனித்துவமான
நிறுவனம் ஆகும். EEASஆனது EUஇன் வெளிநாட்டு அமைச்சு, ராஜதந்திர குழுவுக்கு தொண்டு
செய்கின்றது.
Military
EU பலமான ராணுவக்கூட்டு ஆகும். மேலும் அங்கத்துவநாடுகள் 27ம் NATOவில் அங்கத்துவத்தை கொண்டது. ஐரோப்பிய யூனியனானது 2010இன் பாதுகாப்புக்காக Stockholm
International Peace Research Institute
(SIPRI) மூலம் பிரான்ஸ் 44Billion US Dollarயும் அடுத்து UK 39 Billion Euroவையும்
பாதுகாப்புக்காக செலவிட்டது.
Franceஉம் UK யும் சேர்ந்து 45%ஐ பாதுகாப்புக்காக
செலவிட்டது. இவை ராணுவ
கொள்ளளவைஅதிகரிக்கவும், மிலிட்டரி அராய்ச்சி அபிவிருத்திக்காகவும்
செலவிடப்படுகிறது. 2000ம் ஆண்டு 97% Budget ஐ ராணுவ
ஆராய்ச்சிக்காக UK, France, Spain,
Germany சேர்ந்து செலவிட்டது.
1999ல் Kosovo Warஇன் போது சுயாட்சி செயற்பாட்டை ஆதரித்து EUஅதிகளவான
ராணுவப்படைகளை அனுப்பியது. இவை NATOஉடன் இணைந்து செயற்பட்டது. EUபடைகள் Peace keeping
missionsஇல் கூட ஈடுபட்டது. ( EX:- Africa, Yugoslavia, Middle East) EUஇன் மிலிட்டரி செயற்பாடு பல குழுக்களின் ஆதரவுடன்
இயங்குகிறது. (EX: - E-Defense Agency,
Satellite Centre & Military Staff) 27அங்கத்துவ நாடும் இணைந்து “Great Power” கூட்டுரவாக உள்ளது.
ஐரோப்பிய யூனியனின் மனிதாபிமான உதவிகள்
EUஆனது மிகப்பெரிய மனிதபிமான உதவிகளை உலகில் மேற்கொள்கின்றது.
European Commission
Humanitarian Aid Office (ECHO) ஆனது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குகின்றது.
2006 Budgetஇன் 48%பகுதி( €671Million ) ஆபிரிக்க கரிபியன், பசிபிக் நாடுகளுக்கும் வழங்கப்பட்டது. அங்கத்துவ நாடுகள்
கூட்டாகவும் EU தனியாகவும் உலகில் அதிகளவு உதவிவழங்குனர் ஆகும். மனிதபிமான
உதவிகளுக்காக 70%மும் (EX:- கடன் நிவாரணம், வெளிநாட்டு மாணவர் நிதி, அகதிகளுக்கான உதவி)
ஐரோப்பிய அபிவிருத்திக்காக 30%மும் ஒதுக்கப்படுகிறது.
பொருளாதாரம்
உலகின் மிகப்பெரிய பத்து பொருளாதாரத்தில்
முதலாவது பங்கை ஐரோப்பிய யூனியன் வகிக்கின்றது. ஐரோப்பிய யூனியன் தனது அங்கத்துவ
நாடுகளின் ஆல்புலத்துக்குள் ஒற்றை சந்தையை நிறுவியுள்ளது. Euro zoneஇன் 17நாடுகள் ஒரே நாணயத்தை புழங்குகின்றது. 2010 இல் Global Gross
Domestic Productஇல் 26% (16.242Billion
Inter National Dollar) ஐ EUபகிர்கின்றது. இது மிகப்பெரிய உலகப்பொருளாதார
வலயம் ஆகும். பொருளிலும், சேவையிலும் பாரிய ஏற்று, இறக்குமதியாளர், பெரிய
வர்த்தகப்பங்காளி
(China, India, USA)ஆகும்.
உலகின் 500 மிகப்பெரும் வர்த்தக கூட்டு (Fortune Global 500 In 2010)இன் 161 Head
quartersஆனது EUஇல் உள்ளது. 2007
may EUஇல் வேலையற்றோர்- 7% முதலீடு- 21.4%
GDPஇல், பணவீக்கம்- 2.2%, பொதுமக்கள் பற்றாக்குறை- 0.9% GDPஇல் ஆகும்.
ஐரோப்பிய யூனியனின் உள்நாட்டு சந்தை
EUஇன் அங்கத்துவநாடுகள் பொதுவாக பிராந்தியத்தால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டு நடைமுறையில் உள்ளது. அங்கத்துவ நாடுகளுக்கிடையில்
Single Market, Custom Unionஐ அபிவிருத்தி செய்வதற்காக EECஆல் பொது கடவுசீட்டு உருவாக்கப்பட்டது. Single Marketஆனது கட்டற்ற பொருள் பரிமாற்றம், முதல்,
மக்கள்சேவையை மேற்கொள்ள Custom Unionஆனது பொதுவான உள்ளக பொருட்களுக்கு வரி அறவிடும்.
EUபிரஜைகள் அங்கத்துவ நாடுகளுக்கு இடையில்
தடையின்றிவாழ, தொழில்செய்ய, கல்வி தொடரமுடியும். அங்கத்துவ நாடுகளுக்குள்
சுயதொழில் புரிவோர் எங்கும்சென்று தொழில் தொடர முடியும். EU இதற்கான சேவையை வழங்குகிறது. 60-70 வரையான GDP இவ்வாறான சேவை மூலமே பெறப்படுகின்றது. சேவையின் நோக்கம் தாராள பொருளாதரத்தை
தனது எல்லைக்குள் ஏற்படுத்துவதாகும். EUஆனது Single
Marketஇன் நிலையை நிச்சயிக்க போட்டித்தன்மையான
கொள்கைகளை வழங்குகின்றது.
யூரோ நாணயம் கூட Single Marketஐ கட்டி எழுப்ப உருவாக்கப்பட்டது ( உதாரணமாக-
பொருட்கள் இலகுவில் இடம்பெயர, பண்டமாற்று விலையைப்பேண, குறைந்த வட்டி விகிதம்,
நிலையான விலை மற்றும் Single Financial Market இணைப்பேணவும் உருவாக்கப்பட்டது. யூரோ நாணயமானது 2வது முக்கிய நாணயமாக உலக பரிமாற்றத்தில் உள்ளது. யூரோ நாணயமானது European Central Bank (ECB)இன் கட்டுப்பாட்டில் உள்ளது. Euro Zone இனது Central Bankஆக (ECB) காணப்படுகிறது. நனையக்கொள்கையை
கட்டுப்படுத்தல், நிலையான விலையை தொடருதல் இதன் பணிகளாகும். ECBஆனது General Councilஇன் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் Presidentஆனவர் E.Council மூலமும் Vice President 27அங்கத்துவ நாடுகளில் உள்ள Central Banksஇன் Governors மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர்.
ஐரோப்பிய நீதிமன்றம்
ஐரோப்பிய யூனியனின் நீதித்துறை 1958ல் உருவாக்கப்பட்டது. முன்பிருந்த ஐரோப்பிய
யூனியனின் அமைப்புக்களால் பேசி முடிக்கப்பட்ட சர்வதேச உடன்படிக்கைகள்
நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டது. இது ஐரோப்பிய
யூனியனின் நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகளின் சட்டபூர்வ தண்மை குறித்து
மதிப்பீடு செய்கின்றது. மேலும் உறுப்பினர் நாடுகளுக்கு இடையில் அல்லது தனியார்
கட்சிக்காரர்களுக்கு இடையில் நடக்கும் குடியுரிமைச்சட்டம் தொடர்பான வழக்குகளில்
தீர்ப்பு கூறுகின்றது. உறுப்பு நாடுகளின் சட்டங்கள் ஐரோப்பிய யூனியனின் சட்டத்தோடு
முரண்படும்போது அவற்றை செயல் இழக்கச்செய்ய இந்த அமைப்பால் முடியும். உறுப்பு
நாடுகளால் நியமிக்கப்படும் நடுவர் மன்றம் 15 நீதிபதிகளையும், 8 அரசு தலைமை வழக்கறிஞர்களையும் கொண்டிருக்கும்.
ஐரோப்பிய யூனியனின் 21ம் நூற்றாண்டின் குறிக்கோள்
- சமாதானம், வளமான, உறுதியான வாழ்வை வழங்கள்.
- ஐரோப்பிய கண்டத்தின் பகுதிகளை பாதுகாத்து பலப்படுத்தல்.
- மக்களின் பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தல்.
- சமநிலைப்பொருளாதாரம், சமூக அபிவிருத்திகளை அதிகரித்தல்.
- உலகமயமாதலின் சவால்களை, ஐரோப்பிய மக்களின் பன்மைத்துவத்தால் ஏற்படும்தீமைகளை சந்தித்தல்.
- ஐரோப்பாவின் பங்குகளுக்கு ஆதரவு வழங்கள், நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை ஏற்படுதல், மனித உரிமைகள், சமூக பொருளாதார சந்தையை பாதுகாத்தல்.
- 2006-2015 குறிக்கோள் Gross National Incomeஐ 0.7%ஆல் அதிகரிப்பதாகும்.
ஆக்கம்:-
மீஸா பேகம்
Comments
Post a Comment