Posts

Image
லெனினின் வாழ்க்கை வரலாறு  வாழ்க்கைக் குறிப்பு  லெனின் 1870- ஆம் ஆண்டு ஏப்ரல் 22- ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி புரிந்தார். நேர்மையான மனிதர்.தாயார் மரியா உல்யானவ் அன்பே வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள் , மூன்று சகோதிரிகள் லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும் , பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார். சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இர...
Image
ரணில் - மோடி டில்லியில் சந்திப்பு: இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்து * ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்வு - ரணில் * மீனவர் விவகாரம்: இருநாட்டு மீனவர்களும் பேசித்தீர்க்க வேண்டும் - மோடி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் இதுதொடர்பில் ஆராயப்பட்டிருப்பதுடன், நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்றுக் காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்திருந்ததுடன், புதுடில்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மீனவர் பிரச்சினை, வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பு, கடற்பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்...
Image
வரலாற்றுப் பொக்கிஷங்களில் ஒன்றை இழந்து  இருக்கிறது. இஸ்லாத்தின் மீதான இணைப்பையும் , இணக்கத்தையும் மக்களின் மனங்களில் கலையின் மூலம் ஏற்படுத்திய - காந்தக் குரலுக்கு சொந்தக்காரரான இசை முரசு இ.எம். நாகூர் ஹனீபா தன் சமூக மறுமலர்ச்சிப் பணிக்கான வேள்வியை இந்த பூமியில் நிறுத்திக் கொண்டு விட்டார் என்பதை அறிவது  வேதனை மிக்கது. என்றாலும் - இறைவனிடம் கையேந்தும்படி வலியுறுத்திய அவர்களின் ஆயிரமாயிரம் பாடல் வரிகள் செய்த நற்பணிகளுக்கும் - நல்ல மாற்றங்களுக்கும் உரிய கூலிகளைப்பெற - மகத்தான இறைவன் பால் அவர் திரும்பி இருக்கிறார். அவரது இடைக்காலம் பயணம் இன்றோடு முடிகிறது. எங்கிருந்து வந்ததோ - அங்கேயே அந்த ஆத்மா திரும்பிச் சென்று விட்டது. வல்ல இறைவனே.! எங்கள் வாழ்வையும் பயனுள்ளதாய் இந்த பூமியில் கழித்து முடிக்க அருள் புரிவாய் ஆண்டவனே.!! "இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!!" என்று இசை முரசு கொட்டிய நாகூர் E.M. ஹனீபாவை அறிந்த அளவுக்கு, அவர் பாடிய பெரும்பாலான பாடல் வரிகளை எழுதியக் கவிஞர் பெருமக்கள் அறியப்படவில்லை. நாகூர் ஹனீபா பாடிய பெரும்பாலான பாடல்களை இயற...