Posts

ஒற்றை ஆட்சி தத்துவங்களைக் கொண்ட இந்திய சமஷ்டி முறை  அரசியல் முறைமையில் ‘ சமஷ்டிவாதம் ’ என்ற பதம் அரசியல் அதிகாரங்கள் முழு நாட்டிலும் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து விளக்கமளிக்கப்படுகின்றது . அதாவது மத்திய அரசாங்கத்திற்கும் , மாநில அல்லது பிராந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான அதிகாரங்கள் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன , எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து சமஸ்டி வாதத்திற்கான விளக்கம் வழங்கப்படுகின்றன . தற்கால அரசாங்க முறையானது சமஷ்டியாக அல்லது ஒற்றையாட்சியாக அல்லது இரண்டும் கலந்த ஒன்றாக காணப்படுகின்றது . உலகில ் நடைமுறையிலுள்ள அரசாங்கங்களில் சமஷ்டி முறைக்கு உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா , சுவிற்சர்லாந்து , அவுஸ்திரேலியா , தென் ஆபிரிக்கா , கனடா போன்ற நாடுகளைக் கூறலாம் . ஒற்றையாட்சி முறைமைக்கு உதாரணமாக பிரித்தானியா , பிரான்ஸ் , இலங்கை , சீனா போன்ற நாடுகளைக் கூறலாம் . இவ் இரண்டையும் விட சில நாடுகள் அதிகாரப் பிரிவினை தத்துவத்திற்கு இணங்க அரசாங்கத்தினை ஒழுங்கமைத்து மிக உயர்ந்த நிலையில் அதிகாரங்களை பங்கீடு செய்துள்ளன . இதனை இந்தியாவிலும் மறை...
பெண்களுக்கு எதிரான வன்முறையும் பெண்ணிலைவாதச் ; சிந்தனைகளும் பெண்ணியல் சிந்தனை இன்று உலகில் தவிக்க முடியாத, சிந்தனைத்துறையின் எல்லா அம்சங்களிலும் ஆளுமை செலுத்துகின்ற ஒரு துறையாகவே வளர்ச்சி அடைந்துள்ளது. அரசியல், பண்பாடு, மொழியியல், சமூகவியல், பொருளியல், மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் பெண்ணிலைச்சிந்தனையின் பரிமாணம் வெகுவாக உணரப்படுகின்ற அதேவேளை இச்சிந்தனை இன்று இதன் இலக்கை நோக்கி விரைவாக முன்னேறி வருகிறது. பெண்ணியம், பெண்விடுதலை போன்ற சொற்றொடர்கள் இன்று ஆய்வுலகின் பிரதான இடத்தை பெற்றுள்ளது. பெண்ணியம் என்பது பெண்களின் சமூக நிலையை உயர்த்துவதை நோக்காகக் கொண்ட ஒரு கருத்தியலாகும். இந்தவகையினில் பெண்ணியக் கருத்தியலில் பிரதான எண்ணக்கருக்களுள் “பெண்களும் வன்முறையும்” எனும் விடயம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். மேலும் இவ்விடயம் மிகவும் அன்மைக்காலத்தில்தான் ஒரு தேசிய, சர்வதேச கவனத்திற்குரிய பிரச்சினையாக மாறியது. பெண்களுக்கு எதிரான வன்முறை உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெள...