பெண்களுக்கு எதிரான
வன்முறையும் பெண்ணிலைவாதச்; சிந்தனைகளும்
பெண்ணியல் சிந்தனை இன்று உலகில் தவிக்க முடியாத,
சிந்தனைத்துறையின் எல்லா அம்சங்களிலும் ஆளுமை செலுத்துகின்ற ஒரு துறையாகவே
வளர்ச்சி அடைந்துள்ளது. அரசியல், பண்பாடு, மொழியியல், சமூகவியல், பொருளியல்,
மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் பெண்ணிலைச்சிந்தனையின் பரிமாணம்
வெகுவாக உணரப்படுகின்ற அதேவேளை இச்சிந்தனை இன்று இதன் இலக்கை நோக்கி விரைவாக
முன்னேறி வருகிறது.
பெண்ணியம், பெண்விடுதலை போன்ற சொற்றொடர்கள்
இன்று ஆய்வுலகின் பிரதான இடத்தை பெற்றுள்ளது. பெண்ணியம் என்பது பெண்களின் சமூக
நிலையை உயர்த்துவதை நோக்காகக் கொண்ட ஒரு கருத்தியலாகும். இந்தவகையினில் பெண்ணியக்
கருத்தியலில் பிரதான எண்ணக்கருக்களுள் “பெண்களும் வன்முறையும்” எனும் விடயம்
கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். மேலும் இவ்விடயம் மிகவும் அன்மைக்காலத்தில்தான்
ஒரு தேசிய, சர்வதேச கவனத்திற்குரிய பிரச்சினையாக மாறியது.
பெண்களுக்கு எதிரான வன்முறை
உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. பெண்களின் வன்முறைக்கு எதிரான தினம் உருவாகிய வரலாறு மிகவும் கசப்பான ஒரு நிகழ்வாகும்.
டொமினிக்கன் குடியரசில் Dominican Republic, 1960 நவம்பர் 25 இல் மூன்று சகோதரிகள்
அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல்
ருஜிலோவின் Rafael Trujillo (1930-1961). உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டனர். இவர்கள்
பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே விசேடமாகக் குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப்
பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பிரபல்யமான இந்த மிராபெல் சகோதரிகள் லத்தீன்
அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 1980 ஆம் ஆண்டு முதல் அந்தத் தினம்
அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை
வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும்
தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை
வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில்
செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள்
தினமான டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் திகதி கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் திகதி கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும்
எதிரான வன்முறையானது அவர்களது மனித உரிமைகளின் பாரதூரமான மீறலொன்றாகும். இது உடல்ரீதியானதும், பாலியல்ரீதியானதும், உளவியல்ரீதியானதுமான கெடுதல்
அல்லது வன்முறையின் பயமுறுத்தல், பலாத்காரம்
அல்லது சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளல் ஆகியனவற்றை உள்ளடக்குவதுடன், பொதுவான அல்லது தனிப்பட்ட
வாழ்க்கையில் இடம்பெறவும் முடியும்.
பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை ஏதாவது தனித்த நாட்டுக்கு அல்லது பிராந்தியத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதுடன், பலதரப்பட்ட சமூக-அரசியல், பொருளாதார, கலாசார, சமய, பழங்குடி மற்றும் இனத்துவ வழக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக பெண்களும், பெண்பிள்ளைகளும் வேறுபட்ட விதத்தில் அனேகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் தான் இது பால்நிலை அடிப்படையிலான வன்முறை என வரையறுக்கப்படுகின்றது.
பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை ஏதாவது தனித்த நாட்டுக்கு அல்லது பிராந்தியத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதுடன், பலதரப்பட்ட சமூக-அரசியல், பொருளாதார, கலாசார, சமய, பழங்குடி மற்றும் இனத்துவ வழக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக பெண்களும், பெண்பிள்ளைகளும் வேறுபட்ட விதத்தில் அனேகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் தான் இது பால்நிலை அடிப்படையிலான வன்முறை என வரையறுக்கப்படுகின்றது.
இங்கு ஒவ்வொரு
வயதையும், வகுப்பையும், இனத்துவத்தையும், சமயத்தையும், சாதியையும் மற்றும்
அமைவிடத்தையும் சேர்ந்த பெண்களும், பெண்பிள்ளைகளும்
பாதிக்கப்படலாம் என்பதுடன், பாதிக்கப்படுகின்றார்கள்.
பெண்களுக்கு எதிரான வன்முறையின் பெருமளவு வகைகள் உள்ளன. அவை பின்வருவனவற்றை
உள்ளடக்குகின்றன: அந்நியோன்யமான துணைவர் மூலமான வன்முறை, பாலியல்வல்லுறவு, திருமணம்சார்ந்த
பாலியல்வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும்
வன்முறை அத்துடன்/அல்லது தொந்தரவு, சீதனம்
தொடர்பான வன்முறை, வாழ்க்கைதுணைசாராத
வன்முறை, வீட்டு வேலையாட்களுக்கு எதிரான
வன்முறை, கேலிசெய்தல், ஆட்கடத்தல் மற்றும்
ஆபாசப்புகைப்படம் போன்ற சுரண்டலின் வேறு வடிவங்கள், சமூக வழக்கத்திற்கும், கலாசாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும்
அத்துடன்/அல்லது சமயத்திற்குமான மேற்கோளினால் நியாயப்படுத்தப்பட்டு, கெடுதலை விளைவிக்கும்
வழக்கங்களின் காரணமாக பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும்
எதிரான வன்முறை இடம்பெறும்.
பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான
வன்முறை ஏதாவது இடத்தில் இடம்பெறலாம். இது வீட்டில், குடும்பத்தில் அல்லது
சனசமூகத்தில், வேலை செய்யும் இடத்தில், பொது இடங்களில் மற்றும்
போக்குவரத்தில், விசேடமாக இயற்கை அழிவுகளில், உள்நாட்டு மோதலில், யுத்தத்தில் மற்றும்
கிளர்ச்சிகள் போன்ற பொது குழப்பங்களின் தருணங்களில் அத்துடன் இச் சூழ்நிலைகளின்
காரணமாக உள்ளகரீதியாக இடம்பெயரும் போதும் இடம்பெறலாம்.
பெண்களுக்கு எதிரான வன்முறையினதும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையினதும் முறைமையான
வரைவிலக்கணங்களை நாம் அறிவோமானால் “பாகுபாட்டின் பிரச்சனையை முனைவுபடுத்துவதன்
மூலம் பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும்
எதிரான வன்முறையைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளத்தை பெண்களின் பாகுபாட்டின் சகல
வடிவங்களை ஒழித்தல் மீதான சமவாயம் பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களை
இல்லாதொழித்தல் மீதான சமவாயம் [The Convention on the Elimination of All
Forms of Discrimination of Women ] (CEDAW)”
பெண்களுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட பாகுபாடு:” “........... அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, குடியியல் அல்லது ஏதாவது வேறு துறை ஆகியவற்றில் ஆண்களினதும், பெண்களினதும் சமத்துவத்தினதும், மனித உரிமைகளினதும், அடிப்படைச் சுதந்திரங்களினதும் அடிப்படையொன்றின் மீது, அவர்களது திருமணம்சார்ந்த நிலைக்கு அக்கறையின்றி பெண்கள் அங்கீகரிக்கப்படுவதை, மகிழ்ச்சியடைவதை அல்லது பழகிக்கொள்வதை பலவீனப்படுத்தும் அல்லது செல்லாததாக்கும் விளைவை அல்லது நோக்கத்தை கொண்டுள்ள பால்நிலையின் அடிப்படை மீது செய்யப்பட்டுள்ள ஏதாவது வேறுபாடு, தவிர்ப்பு அல்லது கட்டுப்பாடு.” எனக்கூறுகின்றது.
பெண்களுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட பாகுபாடு:” “........... அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, குடியியல் அல்லது ஏதாவது வேறு துறை ஆகியவற்றில் ஆண்களினதும், பெண்களினதும் சமத்துவத்தினதும், மனித உரிமைகளினதும், அடிப்படைச் சுதந்திரங்களினதும் அடிப்படையொன்றின் மீது, அவர்களது திருமணம்சார்ந்த நிலைக்கு அக்கறையின்றி பெண்கள் அங்கீகரிக்கப்படுவதை, மகிழ்ச்சியடைவதை அல்லது பழகிக்கொள்வதை பலவீனப்படுத்தும் அல்லது செல்லாததாக்கும் விளைவை அல்லது நோக்கத்தை கொண்டுள்ள பால்நிலையின் அடிப்படை மீது செய்யப்பட்டுள்ள ஏதாவது வேறுபாடு, தவிர்ப்பு அல்லது கட்டுப்பாடு.” எனக்கூறுகின்றது.
பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான
பால்நிலை-அடிப்படையிலான வன்முறையின் அல்லது வன்முறையின் பிரதான வடிவங்கள்
வழமையாக பின்வருமாறு வன்முறை
வகைப்படுத்தப்படுகின்றது:
v உடல்ரீதியான
|
|
v உணர்வுப்பூர்வமான/உளவியல்ரீதியான
|
|
v பாலியல்ரீதியான
|
|
v பொருளாதாரரீதியான (கவர்ந்து கொள்ளல்)
|
|
v தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான வன்முறை
(இன்டர்நெற், கையடக்கத் தொலைபேசிகள் போன்றன)
மேலும் இந்த வடிவங்களின் ஒட்டு மொத்த வடிவமாக:-
v
வீட்டு/குடும்ப
வன்முறை (Domestic/family
violence)
v
சமூக வன்முறை (social violence)
v பாலியல் வன்முறை ( Sexual violence) எனவும் வகைபடுத்தலாம்.
|
வீட்டு/குடும்ப வன்முறை (Domestic/family
violence)
வீட்டில் அல்லது குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளே இந்த வகையில் அடங்கும். பெண்களுக்கு எதிரான வன்முறை மீதான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளரான ராதிகா குமாரசுவாமி குடும்ப வன்முறையைப் பற்றிக் கூறும் போது “குடும்பத்தில் பெண்கள் கொண்டிருக்கும் நடிபங்கு காரணமாக அவர்களை இலக்கு வைத்துள்ள அல்லது குடும்ப வட்டத்துக்குள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்கள் மீது தாக்கம் புரிவதை நோக்காகக் கொண்ட குடும்ப வட்டத்துக்குள் புரியப்படும் வன்முறை” என்றார்.
வீட்டு வன்முறை எனும்போது இங்கு கணவன் மனைவிக்கு
இடையில் ஏற்படும் வாக்குவாதங்களின் ஊடாக ஆண் பெண்ணை வன்முறைக்கு
உள்ளாக்குகின்றான். மேலும் கணவன் மது அருந்துதல், மனைவி மீதான சந்தேகம்,
குடும்பப்பிரச்சினை, துணை மீது புரிந்துணர்வு இன்மை, சீதனம், குடும்ப அனுமதியற்ற
திருமணம், ஆணாதிக்கம், நிதி ஆண்களிடம் தங்கியிருத்தல், பெண்களுக்கான பாதுகாப்புச்சட்டங்கள்
குறைவு போன்ற காரணங்களைக் கூறலாம்.
ஐக்கிய அமெரிக்காவில் 18 நிமிடத்துக்கு
ஒருபெண் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றால். இதில் 22% - 35% பெண்கள் பாரிய வன்முறைக்கு இலக்காகி அதிதீவீர சிகிச்சை பெருமளவு உள்ளனர்.
பெரு நாட்டில் பொலிசில் பதிவாகியுள்ள 70% வீட்டு வன்முறைகள்
கணவன் மூலமே இடம்பெறுகின்றது.பாகிஸ்தானில் 80% பெண்கள் வீட்டு வன்முறைக்கு இலக்காகின்றனர். இதேநேரத்தில் கென்யாவில் உள்ள
பெண்களில் சரி பாதி வீதத்தினர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக தொண்டு
நிறுவனமான ஆக்ஸ்ஃபோம் கூறியுள்ளது.
சமூக வன்முறை (social
violence)
வீட்டில் அல்லது குடும்பத்தில் தொடங்கும் வன்முறைகள் வளர்ச்சி அடைந்து சமூக வன்முறையாக மாற்றுப்பரிமாணம் பெறுகின்றது. சமூகத்தில் பெண் மீதான கட்டுப்பாடு சமுக வன்முறை உருவாக காரணமாகின்றது. சமூகம் ஆணை உயர்வாகவும் பெண்ணை இழிவாகவும் கருதுகின்றது. பெண்சிறுவர்களை புறக்கணித்து கல்வி, சுகாதாரம், போசாக்கு விடயங்களில் ஆண் பிள்ளைகளுக்கே முன்னுரிமையளிக்கின்றனர். சீதனம் மிகப்பெரிய வன்முறை ஆகும். இது ஆண்வர்கத்தின் நலனுக்கு உருவாக்கப்பட்டாலும் இங்கு பெண்களே நசுக்கப்படுகின்றனர். சீதனம் கேட்டு வற்புறுத்தல், கொலை செய்தல் என்பன ஆசியாவிலேயே அதிகம் இடம்பெறுகின்றது. பங்களாதேசில் சீதனம் கேட்டு மனைவி முகத்தில் அசிட் வீசும் சம்பவங்களும் அண்மைக்காலங்களில் இடம்பெற்றுள்ளது.
பால்ய வயதில்திருமணம்,
பெண்சிசுக்கொலை, சிறுவயதில் தாய்மையடைதல், பெண்ணுக்கு கல்வி மறுக்கப்படல், பலதார
மணம், விதவைகளை, மலடான பெண்ணை அபசகுனமாக கருதுதல், உடன்கட்டை ஏற வற்புறுத்தல்
என்பன சமூக வன்முறைகளாகும்.
பாலியல் வன்முறை ( Sexual
violence)
பாலியல் வன்முறை என்பது ஒரு பெண்ணுடன் அவரது சம்மதம் இல்லாமல் அல்லது அச்சுறுத்தி, பலாத்காரம் மூலம் அவளது சம்மதம் பெற்ற பின்னர் அல்லது கணவனிடம் இருந்து சட்ட ரீதியாக பிரிந்து வாழும் போது அல்லது போதைப்பொருள், மதுபானம் அருந்திய பின்னர் நிலையற்ற மனநிலையில் இருக்கும் போது அல்லது 16 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்ணின் சம்மதமில்லாமல் பாலியல் வல்லுறவு கொள்ளல், ஏதேனும் பாலியல் செயற்பாடுகள், பலாத்காரம், முறையற்ற உடலுறவு என்பன பாலியல் வன்முறை ஆகும்.
பாலியல் வன்முறையில் மிகவும்
கீழ்த்தரமானது கற்பழிப்பாகும் இது பெண்களுக்கான ஒரு அச்சுறுத்தல் ஆகும்.
அமெரிக்காவில் ஒரு மணித்தியாலத்திற்கு 74 பேர் கற்பழிக்கப்படுகின்றனர். 4 பெண்களுக்கு
ஒருவர் அங்கு கற்பழிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் 35
நிமிடத்துக்கு ஒருவர் கற்பழிக்கப்படுகின்றனர். அனால் 1-10 முறைப்பாடுகளே போலிசிக்கு வருகின்றது. கற்பழிப்பு
தொடர்பில் பல நாடுகளில் சட்டம் பலவீனமானதாக காணப்படுகிறது. கற்பழிப்பானது வீட்டில்
குடும்பத்தினரால் கூட ஏற்படலாம். கற்பழிக்கப்பட்ட பெண்ணை சமூகம் ஒரு அவமானமாக
கருதுகின்றது. ஆப்ரிக்க நாடுகளில் பல இளம்பெண்களுக்கு கற்பழிப்பு மூலம் AIDS பரவுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இன்று பெண்கள்
விபச்சாரதத்திற்காக பெற்றோரால், கணவனால், காதலனால் விற்கப்படுகின்றனர்.
திருமணசேவை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் பெண்கள் வெளிநாட்டுக்கு
கடத்தப்படுகின்றனர். யுத்தங்களின் போதும் பெண்கள் இராணுவ வீரர்களினால்
கற்பழிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. இன்றைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளில்
டிஜிட்டல் வன்முறை ஒரு புதிய பரிமாணம் ஆகும். கையடக்கத்தொலைபேசி மற்றும்
இன்டர்நெட் போன்ற தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் ஊடாக இழைக்கப்படும் வன்முறை
டிஜிட்டல் அல்லது சைபர் வன்முறை எனப்படும். ஆபாச புகைப்படம், பெண்களின்
அனுமதியின்றி அவர்களின் பொருத்தமற்ற படங்களையும், வீடியோக்களையும் சமூக
வலைத்தளங்களில் மேலேற்றுதல், அதனைக்காட்டி பெண்ணை அச்சுறுத்தி பணம் பறித்தல்
என்பனவும் இதிலடங்கும்.
சமீபத்தில்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் எவை எனச்
செய்தி நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது இந்த ஆய்வில் சுகாதாரப் பிரச்சனை, பாலியல்
வன்முறை மற்று பாலியல் அல்லாத வன்முறைகள், பண்பாடு
மதம் மற்றும் பாரம்பரியத்தின் பேரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார
வளம் சரியாகக் கிடைக்காதது, ஆள் கடத்தல் போன்ற
பெண்களுக்கு எதிரான ஆறு பிரச்னைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டன.
அதில்
ஆப்கானிஸ்தானில் தான் பெண்களுக்கு எதிரான அதிகளவான கொடுமைகள் நடப்பதால், அது
பெண்களுக்கான அபாயகரமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் பெண்களின் பயங்கர நிலை குறித்து எடுக்கப்பட்ட
மற்றொரு அண்மைய தரவில் ஆப்கானிஸ்தானில் தான் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்
எனவும் கூறப்பட்டிருந்தது. பெண்களுக்கு
எதிரான வன்முறைகளில் இரண்டாவதாக ஆப்ரிக்காவின் காங்கோ உள்ளது காங்கோவில் தினமும் பல
நூறு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர் காங்கோ குடியரசில் வருடத்தில்
ஆயிரக்காணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைக்கு
ஆளாகிறார்கள்.
மூன்றாவதாக
பாகிஸ்தான் உள்ளது பாகிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருமளவில் அதிகரித்துள்ளது
என ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்நாட்டின் மனித உரிமை அமைப்பு கடந்த 2010ம் ஆண்டின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடும்ப மரியாதை என்ற காரணத்தை முன்னிட்டு ஏறத்தாழ 800 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாளைக்கு 8 பேர் என்ற
எண்ணிக் கையில் 2,900 பெண்கள் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதிலும் பாகிஸ்தானில் மக்கள் நெருக்கம்
அதிகமுள்ள பஞ்சாப் மாகாணத்திலே மிக அதிகளவில் 2,600 பெண்கள்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
பெண்களுக்கு
எதிரான வன்முறைகளில் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகள் கொலை
மற்றும் ஆட்கடத்தல் போன்றவற்றால் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த
2009 இல் சி.பி.ஐ. எடுத்த கணக்கெடுப்பின் படி ஆட்கடத்தலில் 90 சதவீதம் இந்தியாவிற்குள் நடக்கிறது என்றும் நாடுமுழுவதும் 30 லட்சம் பாலியல் பெண் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும்
அவர்களில் 40 சதவீதம் பேர் சிறுமிகள்
என்பதும் வெளியுலகுக்குத் தெரியவந்தது. உட்படுத்தப்படுகின்றதைப் போலவே
இலங்கையிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடும்பம், அரசு, மற்றும்
இராணுவம் என வன்முறையின் பரப்பு அகன்று விரிந்துள்ளது. பெண்கள் தமக்கு எதிராக
இழைக்கப்படும் அரசியல், இராணுவ கொடூரங்களை வெளி
உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்வுகளை பெறுவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்கத்
தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.
கடந்த 2009 ஆண்டின் கணக்கெடுப்பில் இலங்கையில் பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் தொடர்பில் 3366 முறைப்பாடுகள் பொலீஸ்
நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றுள்
பாரதூரமான 773 சம்பவங்கள் பதிவு
செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பாலியல் வல்லுறவு, பெண்கள்
கடத்தல், பணிபுரியும்
வீடுகளில் வன்முறைகளுக்கு உட்படுத்துதல், காயமேற்படுத்துதல்
போன்ற வன்முறைகளே பெண்களு க்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். பொருளாதார ரீதியில்
பெண்கள் பலவீனமடைந்துள்ளமையே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமென்றும், இதன்
காரணமாகவே பெண்கள் இலகுவில் வன்முறைகளு க்கு இலக்காக சாத்தியங்கள் ஏற்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளன. பெண்களைப் பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதன் மூலம் இவற்றை
தடுக்கமுடியுமென்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களின்
அதிகாரம் நிறைந்த உலகில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கண் முன்னே நிறைந்து
இருந்தாலும் அதைவிட அதிகமான தடைகளும் அவமானங்களும் பெண்களுக்கு உள்ளன. கூடுதலாக
ஆண்களின் பெண்ணுரிமை மீறல் ஜனநாயகப் பின்னடைவுக்கு காரணமாவதோடு சமூக
அவலங்களுக்கும் பெண்களை இட்டுச்செல்கின்றது. இந்த அவலங்களுக்கு எதிராக பெண்களுடன்
சேர்ந்து அரசுகள் போராட வேண்டும். பெண்களையும் குழந்தைகளையும் அரசுகள்
பாதுகாப்பதன் மூலமே பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இல்லாது ஒழிக்க முடியும்.
பெண்களுக்குத்
தேவையான சமச்சீரான கல்வியை அரசுகள் அளிக்க முன்வரவேண்டும். பெண்களுக்கு எதிரான
குற்றங்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை சமுதாயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான தடைகளை யெல்லாம் தாண்டி பெண்கள் சமுதாயத்தில் முன்னுக்கு
வரவேண்டும்.
மனித
வளத்துக்காக பெண்கள் செய்யும் தியாகங்களையும் எதிர்காலப் பயன்களையும் கருத்தில்
கொண்டு பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க போராட வேண்டும். குறிப்பாக பாலியல்
பலாத்காரம், பாலியல் வன்முறைகள்
பெண்களுக்கு ஏற்படாமல் தடுக்கவேண்டும் என அண்மையில் நடந்த சூரிச் மாநாட்டில்
வலியுறுத்தப்பட்டது.
இந்த
மாநாட்டில் சுவிஸ் ஜனாதிபதி மிச்சேலின் கள்மி ரே மற்றும் மனித உரிமைக்கான ஐக்கிய
நாடுகள் சபையின் தூதர் நவநீதம்பிள்ளை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
காங்கோ
குடியரசு போன்ற நாடுகளில் ஆயிரக்காணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும்
பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும் அம் மாநாட்டில் பேசிய தலைவர்கள்
குறிப்பிட்டனர்.
மக்கள்
கூட்டத்தை கலைப்பதற்கு ஒரு ஆயுதமாக பெண்கள் மீதான பாலியல் வன்முறை
பயன்படுத்தப்படுகிறது. இந்த வன்முறைகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பெண்கள்
பாதிக்கப்படுகிறார்கள் என சுவிஸ் ஜனாதிபதி கள்மி ரே குறிப்பிட்டார்.
யுகோசுலோவியாவில்
போர் நடந்த போது 50 ஆயிரம் பெண்கள், சிறுமிகள்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். காங்கோவில் தினமும் பல நூறு பெண்கள்
பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.
சுவிஸ்
ஜனாதிபதி கள்மி ரே அயல்துறை அமைச்சராகவும் உள்ளார். அவர் நவநீதம்பிள்ளை மற்றும்
இதர தலைவர்களை பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேச அழைப்பு விடுத்து
இருந்தார். சுவிசில் ஒத்துழைப்பு
மற்றும் பெண்கள் மேம்பாடு மற்றும் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக 1 கோடி
சுவிஸ் பிராங்க் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதே போன்று ஏனைய நாடுகளும் முன்வர
வேண்டும். இனி பெண்களுக்கெதிரான வன்முறையின் விளைவான பெண்ணிலைச்சிந்தனையின்
தோற்றம் பற்றிப்பாப்போம்.
பெண்ணிலைவாதச் சிந்தனைகள்
பெண்களின் சமுக நிலையை உயர்த்துவதை நோக்காகக் கொண்ட கருத்தியல்தான் பெண்ணிலைவாதக்கருத்தியல் ஆகும். அரசியல், பொருளாதார ரீதியில் ஆண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும், அவர்கள் தாமாக முடிவெடுத்து அவர்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்பதே பெண்ணிலைவாதமாகும். பெண்களின் பாரபட்சங்களுக்கு எதிராக பாடுபடும் இயக்கம் பெண்ணிலைவாத இயக்கமாகும், பாடுபடுபவர்கள் பெண்ணிலைவாதிகளாவர். பெண்ணிலைவாதத்திற்கு ஒருபொதுவான வரைவிலக்கணம் இல்லை அது காலத்துக்கு காலம் நாட்டுக்கு நாடு கருத்தியலுக்கு கருத்தியல் மாறுபடும்.
பெண்ணிலைவாதத்திற்கு அறிஞர்கள் கூறிய
வரைவிலக்கணமாக:-
- B.ஸ்மித்:- எல்லா பெண்களையும் அரசியல் மற்றும் பிற அடிமைத்தனங்களில் இருந்தும் விடுவித்தல் பெண்ணிலைவாதமாகும்.
- திரேசா:- உலகை மாற்றியமைக்கும் இயக்கமே பெண்ணிலைவாதமாகும்.
- சார்ட்பன்ச்:- பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமையை பெற்றுத்தருவது மட்டுமின்றி சமுகத்தை மாற்றியமைக்கும் ஒரு செயலே பெண்ணிலைவாதமாகும்.
- புட்சர்:- பெண்களின் பாலின பாகுபாட்டால் அனுபவிக்கும் தனிப்பட்ட பொருளாதார துன்பங்களை எதிர்த்து மேற்கொள்ளும் இயக்கமே பெண்ணிலைவாதமாகும்.
Feminism என்ற ஆங்கிலச்சொல் famina என்ற லத்தீன் மொழியில் தோற்றம்பெற்றதாகும். Famina என்பது பெண்ணின் குணாதிசியங்களைக் குறிக்கும். 1889இல் இச்சொல்லுக்கு பதிலாக womanism என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும் 1890 இலிருந்து பாலினசமத்துவம், பெண்ணுரிமை
இயக்கங்களை குறிப்பிட Feminism எனும் சொல் பயன்பாட்டுக்கு வந்தது.
பெண்ணியம் என்ற சொல் 20 ம் நூற்றான்டைச் சேர்ந்ததாக காணப்பட்டாலும்
புராதன கிரேக்க நாகரிகங்களிலும் காணக்கூடியதாக இருந்தது எடுத்துக்காட்டாக Plato என்ற அரசியல் அறிஞர் தனது Republic என்ற நூலின் மூலம் பெண்சமத்துவம்,
கல்வியில்சமத்துவம், தொழில்புரிவதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார். ஆனாலும்
முதலில் பெண்களின் உரிமை பற்றிக்கூரிய நூலாக இத்தாலியைச் சேர்ந்த கிறிஸ்டின் டி
பெசன் 1405 இல் எழுதிய Book of city of
ladies காணப்படுகின்றது. நவீன பெண்ணிலைவாதத்தின் முதல் நூலாக இங்கிலாந்தைச் சேர்ந்த
மேரி வோல்டன் கிராப்ட் எழுதிய Vindication of right of woman காணப்படுகின்றது.
ஆரம்பகால பெண்ணிய இயக்கங்கள் வாக்குரிமை,
சட்டஉரிமை போன்றவற்றுக்காக உருவாக்கப்பட்டாலும் பின் அது ஆணாதிக்க எதிர்ப்பு
இயக்கமாக மாறியது. பெண்ணியவாதிகள் ஆண்களை அன்றி ஆண் ஆதிக்கத்தை வெறுத்தனர். ஆண்கள்
பெண்ணியவாதிகளுக்கு எதிராக செயற்பட்டனர் ஏனெனில் இதுவரை காலம் தாம் அனுபவித்து
வந்த முன்னுரிமையை அவர்கள் இழக்க மறுத்தமையே காரணமாகும். பெண்ணிலைவாதம் சமத்துவமான
சமுகத்தை உருவாக்கக்கோருகிறது. பெண்ணிலைவாதத்திற்கு அடிப்படையான சுதந்திரம்,
சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துக்கள் முதலில் பிரான்சியப்புரட்சியில்
இருந்து பெறப்பட்டு பின் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இயக்கமாக பரிணமித்தது.
கைத்தொழில் புரட்சியின் பின் பெண்கள் வேலைக்கு சென்றதால் அங்கு காணப்பட்ட ஆணாதிக்கத்தை
எதிர்த்து பல பெண்ணிய இயக்கங்கள் தோன்றியது. பெண்ணிலைவாதம் ஆரம்பத்தில் ஒரே இலக்கு
ஒரே கொள்கை அடிப்படையில் தோன்றினாலும் பின்னர் கொள்கை அடிப்படையில்
பிளவுக்குள்ளானது. பெண்ணிலைவாதமானது தாராண்மை பெண்ணிலைவாதம், சோஷலிச
பெண்ணிலைவாதம், மாக்சிஸ பெண்ணிலைவாதம், தீவிர பெண்ணிலைவாதம் எனவும் அதிலும் பல
உட்பிரிவுகளாகவும் இன்று பிளவுபட்டுள்ளது. நாம் பிரதான பிரிவுகளான தாராண்மை
பெண்ணிலைவாதம், தீவிர பெண்ணிலைவாதம் ஆகிய இரண்டைப்பற்றியும் இங்கு ஆராய்வோம்.
தாராண்மை பெண்ணிலைவாதம்
18 ம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தோன்றிய பெண்ணிலைவாத கருத்துக்கள் தாராண்மை பெண்ணிலைவாதம் எனும் பிரிவிலடங்கும். பிரான்சிய புரட்சி, அமெரிக்க விடுதலைப்புரட்சி என்பன சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த சுதந்திரம் அப்போது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. பெண்களுக்கு இச்சுதந்திரம் மறுக்கப்பட்டது. ஏனெனில் பெண்ணுக்கு பகுத்தறிவு குறைவு, பெண்ணானானவள் பெண் எனும் அடிப்படையில் நோக்கப்படுகிறாள் பின்புதான் மனிதன் என்று நோக்கப்டுகிறாள். இதனால் தாராண்மை பெண்ணிலைவாதத்தின் பிரதான கருத்து “பெண்ணும் ஆணைப்போல் ஒரு தனி நபர், அவள் ஆணின் போகப்பொருள் அன்று, பெண் ஆணைச்சார்ந்து வாழும் நிலையையும் மீறி அவளுக்கு தனி மனித உரிமை, சுதந்திரமும் தேவை” என்பதாகும்.
ஆரம்பகால தாராண்மை பெண்ணியவாதிகள் பெண்களுக்கு
தனிமனித பிறப்புரிமையை கோரினர். அக்கால மனிதசுதந்திரம் பெண்களுக்கு சுதந்திரம்
தரவில்லை என தாராண்மை பெண்ணிலைவாதியான மேரி வோல்ஸ்டன் கிராப்ட் எழுதினர். தனது
நூலான “பெண்களின் உரிமைகளை நியாயப்படுத்தல்” (Vindication of
right of woman ) இல் 1792இல் இடம்பெற்ற பிரான்சியப்புரட்சியின் கருத்துக்களை நியாயப்படுத்தி அது ஆண்,
பெண் ஆகிய இருபாலருக்குமுரியது எனவும், ஆண்,பெண் இயற்கையில் மாறுபட்டவர்கள்,
பெண்களின் குணங்கள் ஆண்களால் தீர்மானிக்கப்பட்டது, பெண்களின் திறமைகளை சமூகம்
சரியாக வெளிக்கொண்டு வரவில்லை இதற்கு பெண்களுக்கு கல்வி அளிக்கப்படல் வேண்டும்,
இது அறிவுள்ள மனைவியாக, அன்னையாக பெண்களை மாற்றும் என்றார். இந்த நூல்
பெண்ணிலைவாதிகளின் வேதமாக அக்காலத்தில் விளங்கியது.
ஜோன் ஸ்டுவட் மில்,ஹெரிட் டைலர் போன்றோர் The subjection of
the woman என்ற நூலில்
“பால்நிலை என்பது பொருத்தமற்ற ஒன்று என்றும் பெண்கள் ஆண்கள் அனுபவிக்கும்
உரிமைக்கும்,சுதந்திரத்திற்கும் தகுதிடையவர்கள் என்றார். ஆரம்பகால தாராண்மை
பெண்ணிலைவாதிகள் பெண்களின் முக்கியமான இடம் குடும்பம் என்றனர். இவர்கள் ஆண்,பெண்
வேலைப்பங்கீட்டை எதிர்க்கவில்லை மாறாக இரு வேலைகளுக்கும் இடையில் உயர்வு,தாழ்வு
காட்டப்படாமல் சமமாக கருதப்பட வேண்டும் என்கின்றனர். 20 ம் நூற்றாண்டின் சிறந்த தாராண்மை
பெண்ணிலைவாதியாக பெட்டி பிரைடன் காணப்படுகின்றார். இவர் தனது The feminist mystique எனும் நூலில் அக்காலத்தில் அமெரிக்காவில் நிலவிய
பெண்களின் நிலையை விளக்குகின்றார். “பெண் வெறும் பாலியல், படுக்கையறை பொருள் அவள்
குழந்தை வளர்க்கவும், ஆண்களை கவரவும், அழகுசாதனம் போன்றவற்றுக்கே தகுதி எனவும்
அவர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
சமூகம் பெண்களின் உயிர், மனதை மதிப்பதில்லை
இதனால் பெண் மனநோயாளி ஆவதுடன் மதுவுக்கும் அடிமையாகின்றாள். இதனால் பெண்கள்
திருமணம், தாய்மையுடன் லட்சிய, அர்த்தமுள்ள வாழ்கை வாழ வேண்டும் என அவர் மேலும்
குறிப்பிடுகின்றார். இந்த நூல் அமெரிக்க பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை
ஏற்படுத்தியதுடன் 1970ல் 10லட்சம் பிரதிகளை விற்றது. பிரைடன் பெண்களுக்காக தேசிய பெண்கள் அமைப்பு National
organization for woman (NOW) எனும் அமைப்பை நிறுவி அதன் முதல் தலைவராகவும் இருந்தார். NOW இன் நோக்கம் சமுகத்தில் நிலவும் பால்
பாகுபாட்டை சட்டத்தின் துணையுடன் எதிர்த்தல், அமெரிக்க பெண்களுக்கான பங்குகளை
முன்வைத்தல் என்பவையாகும். மேலும் இந்த அமைப்பு அரசியல் யாப்பில் சமஉரிமை கோரல்,
வேளைகளில் பால் பாகுபாடு நீக்கம், குழந்தை வளர்ப்பு நிலையம், சமகல்வி வாய்ப்பு,
பெண்பாதுகாப்புச்சட்டம், மணவிலக்கு, பெண் பாலியல் பொருள் நீக்கம், குழந்தைப்பேரை
முடிவு செய்தல் போன்றவற்றையும் ஏற்றது. NOW இன் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி Johnson 1967 இல் அரசாங்க வேளையில் பால் பாகுபாடு காட்டக்கூடாது
என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.
தாராள பெண்ணிலைவாதிகள் கூறும் பெண்களின்
முன்னேற்ற வழிமுறைகளாக பெண்கள் தாழ்நிலை அடைந்திருப்பதற்க்கு சமுகத்தில் நிலவும்
குறைபாடுகளே காரணமாகும். அவற்றுக்கு சீர்திருத்தம் போதும் புரட்சி தேவையில்லை,
பெண்களுக்கு உரிமையளிக்கும் வகையில் சட்ட சீர்திருத்தத்தை ஏற்படுதல், சொத்து,
சிவில் உரிமையை வழங்குதல், திருமணம் கணவன் மனைவிக்கிடையில் ஒரு உடன்பாடாக கருதப்பட
வேண்டும், பெண்களுக்கு கல்வி அளிக்கப்படல் வேண்டும், பெண்கள் பற்றிய சமுகத்தில்
நிலவும் தவறான கருத்தை நீக்க வேண்டும், அரசியல் கட்சி, ஊடகங்கள் மூலம்
பெண்களுக்கெதிரான வன்முறையை வெளிக்கொணறல் போன்றனவாகும்.
தாராண்மை பெண்ணிலைவாதத்தின் குறைபாடுகள்.
v தாராண்மை பெண்ணியம் கூறும் தனியாள்வாதம் சமூக
கட்டமைப்புக்கும், கலாசாரத்திற்கும் பொருத்தமற்றதாகும்.
v தாராண்மை பெண்ணியத்தின் கோரிக்கைகள் கல்வி, தொழில்
புரியும் பெண்வகுப்பாரை (மேற்கு வெள்ளை நடுத்தர வர்க்க) மட்டுமே
பிரதிநிதிததுவப்படுத்துகின்றது. இது கறுப்பினப் பெண்களின் பிரச்சினைகளை
வெளிக்கொணரவில்லை.
v இது ஒரு சீர்திருத்தம் மட்டுமே இது
வர்க்க,இன,பால் சார்ந்த அடக்குமுறையால் பெண் நசுக்கப்படுவதைப்பற்றி ஆராயவில்லை.
v இது பெண்ணின் மீதான ஆணாதிக்க மதிப்பை
எதிர்க்காமல் ஆதரிக்கின்றது.
v இது பெண்களின் தாழ்மைநிலை பற்றி சரியான
விளக்கத்தை கொடுக்க மறந்துவிட்டது.
இவ்வாறாக தாராண்மை பெண்ணிலைவாதம்
காணப்படுகின்றது.
தீவிர பெண்ணிலைவாதம்
இவர்கள் பெண்ணிலைவாதத்தில் தீவிர கருத்தைக்கொண்டு ஆண்களை முற்றாக எதிர்க்கின்றது. இவர்கள் தாராண்மை பெண்ணிலைவாதத்தில் இருந்து பிரிந்து சென்ற தீவிர கருத்துடையவர்களே இவர்கள்.
இவர்களின் தோற்றத்தை ஆராய்ந்தால் 1960 களில் தனிமனித சுதந்திரம் ஒன்றே வாழ்வின்
குறிக்கோளாகின. இதற்காக பல இயக்கங்கள் உருவாகின. உதாரணமாக Black civil
rights movement , Peace movement. இந்த இயக்கங்களில் தீவிரமாக செயற்பட்ட பெண்கள்
இதில் பெற்ற அனுபவத்துடன் ஆண்களிடம் இருந்து பிரிந்து ஆண்களுக்கெதிராக தீவிரமாக
போரிட்டனர். இவர்கள் தாராண்மை பெண்ணிலைவாதத்தின் மூலம் கிடைக்கும் சட்டஉரிமையை
எதிர்த்ததுடன் NOW ஆனது ஆண்களின்
கைப்பாவை என்றனர். இந்த தீவிர பெண்களில் ஒருவரான ஷூலாமித் பாயர்ஸ்டோன் என்பவர்
தீவிர பெண்கள் இயக்கத்தை உருவாக்கினார். தீவிர கருத்தைக்கொண்ட பல இயக்கங்கள்
அக்காலத்தில் தோன்றின. 1969 இல் தீவிர தண்மையுள்ள 500 பெண்ணியக்கங்கள் காணப்பட்டுள்ளன. இவர்கள் அந்த
வருடம் அமெரிக்காவில் இடம்பெற்ற அழகுராணிப்போட்டியை எதிர்த்ததனால் பிரபலம் ஆகினர்.
1969 இல் இந்த தீவிர பெண்கள் இயக்கம் ஒன்றினைந்து NOW இல் உள்ளது போல 40 கோரிக்கைகளை வகுத்தனர். அவை “ஆண்களுக்கு சமமான
கல்வி, வேலைவாய்ப்பு, பெண் கருக்கலைப்பு உரிமை, 24 மணிநேர குழந்தைக்காப்பகம், பெண் விளம்பரத்தடை
என்பனவாகும். இவர்கள் தீவிர பெண்ணியக் கோட்பாடுகளை பரப்பும்
“முதலாண்டுக்குறிப்புகள்” என்ற பத்திரிகையையும் வெளியிட்டது. இந்த பத்திரிகை
பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வையும், வீட்டு வேலைக்கு ஊதியம், கருக்கலைப்பு
சுதந்திரம் பற்றிக்கூறுகின்றது.
இக்காலத்தில் கருத்தடைச்சாதனங்கள் உபயோகத்திற்கு
வந்தன. இது ஆண்களுக்கே சாதகமான ஒன்று என தீவிர பெண்ணியலாளர்கள் கருதி
ஓரினச்சேர்க்கையை ஒப்புக்கொன்டனர். NOW இதனை எதிர்த்தது, இதனால் தீவீரகருத்தைக்
கொண்டவர்கள் NOW இலிருந்து தனியாக
பிரிந்து சென்றனர். கேட் மில்லட் 1970இல் Sexual politics பெர்மின் கிரீன் The female envunch என்ற நூல்களில் மூலமும் பெண் கர்ப்பம் தரிப்பதே
பெண்களுக்கு முதல் எதிரி என்றனர். ஓரினக்கலவி குறித்து தீவிர பெண்ணிலைவாதிகளின்
கருத்தரங்கில் இப்பெண்கள் ஆண்களால் தாக்கப்பட்டனர். இது பெண்களின் கோபத்தை
தூண்டியது. இதன் பின் ரீட்டா பிரவுன், சார்லட் பன்ச் போன்ற அதிதீவிரவாதிகளால் Lesbian feminism
உருவாக காரணமாகின்றது. இதன் ஒரு பிரிவாக பயங்கர
புரட்சிப்பெண்ணியம் உருவானது. இது ஆண் ஆதிக்கத்துக்கு எதிராக தீவிர தாக்குதல்
நடத்தியது.
தீவிர பெண்ணிலைவாதமானது நான்கு முக்கிய
கோட்பாடுகளில் அடங்குகின்றது.
v ஆணாதிக்கம்
v குடும்பம்
v பாலியல்
v பெண்களின் வரலாறு என்பவை ஆகும்.
ஆணாதிக்கம் எங்கும் அடங்கியுள்ளது. இதை
வலியுறுத்துவதுதான் குடும்பம் இங்கு காணப்படும் வேலைப்பாகுபாடே ஆணாதிக்கத்தை
ஆரம்பிக்கின்றது. ஒருத்தி ஒரு ஆணை மட்டுமே மணக்கலாம் இந்த நியதி ஆண்களுக்கல்ல இது
பெண்ணின் பாலியலில் மீதான ஆனதிக்கமாகும். இந்நிலையை மாற்ற பெண்களின் வரலாற்றை
ஆராய்வது முக்கியமானதாகும். சமுக மாற்றத்தில் எப்போது ஏன் பெண்கள் ஆண்களால் நசுக்கப்படும்
வழக்கம் தோன்றியது, இதனை அறிந்தால்தான் அந்த நிலையை மாற்றலாம்.
தீவிர பெண்கள் ஆண்களே பெண்களுக்கு எதிரி
எனக்கருதுகின்றனர். ஆண்களை எவ்வகையிலும் சாராது பெண்களுக்குள் உறவு கொள்வதை
ஆதரிக்கின்றனர். பெண்களுக்கென தனியான அமைப்புக்கள், உணவகம், விடுதி, ஊடகம்
என்பனவற்றை அமைத்துள்ளனர். குடும்பம் எனும் அமைப்பு தகர்க்கப்பட வேண்டும்,
பாலியலில் முழு சுதந்திரம், வாழ்கையை எப்படியும் வாழும் சுதந்திரம், குழந்தை
பெரும் பொறுப்பில் இருந்து சுதந்திரம் என்பதை கோருகின்றனர். “ஷூலாமித்” குழந்தை
உடலுக்கு வெளியே செயற்கை முறையில் உருவாக்கி அதனை கூட்டு முறை சமுதாயத்தில்
வளர்க்க வேண்டும் என்கின்றார். தீவிர பெண்ணியலாளர்கள் தாய்மை(motherhood) என்பது
முழுக்க பெண்ணைச்சார்ந்தது இங்கு ஏன் Fatherhood எழவில்லை எனக்கூறுகின்றனர்.
தீவிர பெண்ணிலைவாதத்தின் குறைபாடுகள்:-
v உயிரியல் மட்டுமே ஆண், பெண் வேலைப்பாகுபாட்டை
தீர்மானிக்கின்றது என்பது தவறாகும்.
v ஒருபாலர் உறவு, குடும்ப எதிர்ப்பு, கருப்பைக்கு
வெளியே குழந்தைப்பிறப்பு என்பன பெரும்பாலானவர்களால் எதிக்கப்பட்டது.
v தீவிர பெண்களே தனிமை, குழந்தையின்மை, அன்பு,
பாச, அரவனைப்புக்கு பிற்காலத்தில் ஏங்க ஆரம்பித்தனர்.
v குடும்ப முறை, மனைவி, தாய் எனும் பாத்திரத்தை
எதிர்த்ததால் அதிகமான ஆண்களின் விரோதத்தை சம்பாதித்தனர்.
v கட்டுப்பாடற்ற பாலுறவு பால்வினை நோய் பற்றிய
பீதியை உண்டாகியது.
v கருக்கலைப்புச்சுதந்திரம் வெறும் பெண் குழந்தை
பெற்று ஆண் குழந்தைகளை கலைக்கும் நிலை உருவானது.
தீவிர பெண்ணிலைவாதமானது சிறு சிறு
குழுவாகபிரிந்து தலைமைத்துவம் இன்றி, தமக்கென சரியான அமைப்போ அங்கீகரிக்கப்பட்ட
திட்டமோ இன்றி இன்று காணப்படுகிறது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் இன்றைய கால
சூழ்நிலைக்கு ஒன்ரிப்போவதாக தாராண்மை பெண்ணியமே காணப்ப்டுகின்றது என்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்.
ஆக்கம்:-
மீஸா பேகம்
Comments
Post a Comment