கடலுக்கு அடியில் நீர்வீழ்ச்சி 




மொரீசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்தியப் பெருங்கடல்தான்.
.
இப்பெருங்கடலின் எல்லைகளாக, தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே அவுஸ்திரேலியாவும் அமைந்துள்ளன.
.
இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீற்றர் ஆகும்.
.
இந்நிலையில், இந்திய பெருங்கடலில் உள்ள மொரீசியஸ் அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருப்பது தொடர்பான புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
.
இந்த சேட்டிலைட் புகைப்படத்தில், கடல் நீருக்கடியில் நீர்வீழ்ச்சி இருப்பதை காட்டுகிறது. கடலோரத்தில் மணல் திட்டு மற்றும் படிவம் காரணமாக இது ஏற்பட்டுள்ளது.
.
இந்த நீர்வீழ்ச்சியை தீவில் இருந்து தென்மேற்காக மிகவும் கூர்மையாக உற்றுப்பார்த்தால் காணமுடியும்.
.

Comments

Popular posts from this blog