இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுக்கொள்கைகள் உலக நாடுகளைப் பொறுத்த வரையில் பொதுக் கொள்கை என்பது முக்கிய ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது. பொதுக்கொள்கை என்பது மக்களினுடைய பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் முயற்சியாகும். ஒரு நாட்டின் அரசாங்கத்தினுடைய சட்ட நியதிகள் , திட்டங்கள் , தீர்மானங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் என்பன பொதுக் கொள்கையினை விருத்தி செய்யும் முக்கிய விடயங்களாக காணப்படுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இந்த பொதுக் கொள்கையானது பொதுத்துறை நிர்வாகத்தின் முக்கியமான ஒரு ஆய்வாக காணப்படுகின்றது. பொதுக்கொள்கையானது அரசாங்கத்தினால் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயன்முறையாகும். இக்கற்கை நெறியானது 1972 ல் சார்ளஸ் மரியன் ( Charles merrian) என்ற அரசியல் விஞ்ஞானி அரசியல் கோட்பாடுகளுக்கு இடையிலான யதார்த்தத்தை கட்டியெழுப்புவதனூடாக தோற்றம் பெற்றது. பொதுக்கொள்கை தொடர்பில் வை.றோ ( Y.Drow) என்பவர் கூறுகையில் கொள்கை என்பது பின்பற்ற வேண்டி...
Popular posts from this blog
மோதல் தீர்வு அணுகுமுறைகளுக்கிடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் தற்காலத்தில் பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு சமூகத்திலும் காணப்படுகின்ற உலகளாவிய ரீதியிலான ஒரு தோற்றப்பாடு மோதல் எனலாம். இன்றைய மனித வாழ்வில் மோதல் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக விளங்குகின்றது. மோதல் என்பது இரண்டு அல்லது பல மனிதர்கள், குழுக்கள் அல்லது அரசுகள் என்பவற்றிக்கிடையிலான ஓர் உறவு ஆகும். ஆனால் அது ஒரு விசேட உறவாகும். அது நலன்களுக்கான போட்டி எனவும் கூறப்படுகிறது. இருந்த போதிலும் மோதல் என்றால் என்ன என்பதை வரையறுப்பது கடினமானதாகும். இதற்கு பல அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். அந்தவகையில், Ø James & A Scellberg :- போட்டித்தன்மையான நலன்கள், வேறுபட்ட அடையாளங்கள் மற்றும் வேறுபட்ட மனோபாவங்கள் அடிப்படையில் தனிநபர்களுக்கிடையில் காணப்படும் எதிர்நிலையே சமூக மோதல் எனலாம். Ø JL. Hocker & W.Wilmot :- சில இலக்குகளை அடைந்து கொள்வதில் ஒருவருக்கொருவர் தலையீடு செய்வதும் ஒவ்வாத இலக்குகளை கொண்டிருப்பதாக உணருகின்ற சுதந்திர மக்களின் ஊடாட்டம் மோதலாகும். Ø ...
ஜனாதிபதியின் அதியுச்ச அதிகாரங்கள் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துமா? இலங்கையின் நடைமுறை அரசியல் யாப்பு ஒரு அலசல் பார்வை நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை ஏற்படுத்திய 2ஆம் குடியரசு அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு அதிகளவிலான அதிகாரங்களைக் குவித்துள்ளது. முதலாம் குடியரசு யாப்பில் பிரதமர் பெற்றிருந்த உண்மை அதிகாரங்களையும் ஜனாதிபதி கொண்டிருந்த பெயரளவு அதிகாரங்களையும் ஒருங்கே கொண்டதாக 2ஆம் குடியரசு யாப்பின் ஜனாதிபதிப் பதவி விளங்குகின்றது. நிறைவேற்றுத்துறையில் மட்டுமன்றி சட்ட மற்றும் நீதித்துறைகளிலும் ஜனாதிபதி பெற்றுள்ள அதிகாரங்கள் உலகில் ஜனாதிபதி ஆட்சி முறைக்குச் சிறப்பித்துக் கூறப்படும் அமெரிக்க ஜனாதிபதியை விடவும் அதிகமென விமர்சிக்கப்படுகின்றது. யாப்பின் முதலாம் அத்தியாயத்தின் 4(ஆ) பிரிவு "இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்றுத்துறை அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்படும் குடியரசு ஜனாதிபதியால் பிரயோகிக்கப்பட வேண்டும்' என்கிறது. யாப்பின் 30(1) பிரிவு "இலங்கைக் குடியரசுக்கு ஜனாதிபதி ஒருவர் இருக்க வேண்டும் என்பதுடன் அவர் அரசின் தலைவரும் நிறைவேற்றுத்துற...
Comments
Post a Comment