இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுக்கொள்கைகள் உலக நாடுகளைப் பொறுத்த வரையில் பொதுக் கொள்கை என்பது முக்கிய ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது. பொதுக்கொள்கை என்பது மக்களினுடைய பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் முயற்சியாகும். ஒரு நாட்டின் அரசாங்கத்தினுடைய சட்ட நியதிகள் , திட்டங்கள் , தீர்மானங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் என்பன பொதுக் கொள்கையினை விருத்தி செய்யும் முக்கிய விடயங்களாக காணப்படுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இந்த பொதுக் கொள்கையானது பொதுத்துறை நிர்வாகத்தின் முக்கியமான ஒரு ஆய்வாக காணப்படுகின்றது. பொதுக்கொள்கையானது அரசாங்கத்தினால் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயன்முறையாகும். இக்கற்கை நெறியானது 1972 ல் சார்ளஸ் மரியன் ( Charles merrian) என்ற அரசியல் விஞ்ஞானி அரசியல் கோட்பாடுகளுக்கு இடையிலான யதார்த்தத்தை கட்டியெழுப்புவதனூடாக தோற்றம் பெற்றது. பொதுக்கொள்கை தொடர்பில் வை.றோ ( Y.Drow) என்பவர் கூறுகையில் கொள்கை என்பது பின்பற்ற வேண்டி...
Popular posts from this blog
இலங்கையில் சிறுபாண்மையோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உலகில் பல்வேறு நாடுகளில் சிறுபான்மையினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களைப் பாதுகாப்பது ஒவ்வொறு தேசிய அரசுகளினதும் கடமையாக உள்ளது. ஒரு சில அரசுகள் சிறுபான்மையினர் தொடர்பில் கரிசனை கொண்டாலும் இன்னும் சில அரசுகள் அம்மக்கள் குழுவுக்கு எதிரான சட்டங்களையும், அடக்குமுறைகளையும் பிரயோகித்து வருகின்றது. சமூக, அரசியல், பொருளாதாரப் பரப்பில் அதிகாரம், அந்தஸ்து மற்றும் சலுகைகள் அல்லது முன்னுரிமைகள் குறைந்த ஒரு மக்கள் வகுப்பினரையே சிறுபான்மையினர் என அழைக்கிறோம். இவ்வாறாக ஏனைய நாடுகளைப் போல இலங்கையிலும் குறிப்பாக இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆரம்பம் முதல் இன்றுவரை முகம்கொடுத்து வருகின்றனர். அவற்றை இனி விரிவாக ஆராய்வோம். இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் எதிநோக்கும் பிரச்சினைகள் இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் தற்காலத்திலும் பல்வேறு சவால்களை சமுக, பொருளாதார, அரசியல் ரீதியில் எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையில் சிறுபான்மையோருக்கு எதிரான உணர்வுகள் காலன...









Comments
Post a Comment