பாகிஸ்தானின் இராணுவ ஆட்சி

பொதுவாக உலகின் முக்கிய பிராந்தியங்களின் ஆதிக்கவாத அரசியலில் முனைப்படைந்து காணப்படும் இராணுவ பரிமாணம் தென்னாசியாவைப் பொருத்தவரையிலும் விதிவிலக்கானதாக அமையவில்லை. இவ் இராணுவ பரிமாணம் தென்னாசியாவில் ஒருசில நாடுகளுக்கு விசேடமானதாக நடைமுறையில் இருந்தாலும் எல்லா நாடுகளிலும் இராணுவ ஆதிக்கம் ஒரு வகையில் நிலவாமல் இல்லை.
அரசியலிலோ அல்லது ஆட்சித்துறையிலோ இராணுவத் தலைமையும் பணிக்குழுவும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும்போது அங்கு சட்டமியற்றலும் சட்ட அமுலாக்கலும் இராணுவத்தின் அதிகாரத்துவம் (MILITARY AUTHORITARANISM) காணப்படும் போது அதனை இராணுவ பரிமாணமாக புரிந்துகொள்ளலாம்.

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி
ஒப்பீட்டு அடிப்படையில் தென்னாசிய நாடுகளில் பாகிஸ்தானிலே நேரடி இராணுவ ஆட்சி முறைமை மிக உயர்வான அரசியல் கலாசாரமாக பேணப்படுவது தவிர்க்க முடியாத அம்சமாகவுள்ளது. பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டு சுதந்திரத்திலிருந்து ஜனநாயக அரசியலமைப்பு ஆட்சி முறைமையை விட இராணுவ ஆட்சி முறையில் நாட்டங் கொண்டதாக விளங்கியது. பணிக்குழுவும் (Bureaucratic) அரசியல் கட்சிகளும் இராணுவத்தின் செல்வாக்குக்கு உட்பட்டவையாக விளங்கியது.
இவ்வாறு நிகழ்வதற்கான பிரதான காரணியாக அந்நாட்டு மக்களின் அரசியல் கலாசாரம் பாரிய பங்களிப்பைச் செய்கிறது. இஸ்லாமியர்களின் அரசியல் கலாசாரத்தை மிக நுணுக்கமாக அவதானிக்கும்போது அதில் இராணுவ பரிமாணம் பிரதிபலிப்பதைக் காணலாம். தென்னாசிய இஸ்லாமியர்களின் மூதாதையர்களான அரேபியர்கள் கிறிஸ்தவர்களுடனும் தம் இனக் குழுக்களிடையேயும் மிக நீண்ட காலமாக போர் புரிந்துள்ளதை காண முடிகிறது. இவ்வியல்புடன் இந்திய துணைக்கண்டத்திற்குள் ஊடுருவிய இஸ்லாமியர்கள் இந்துமத எதிர்ப்புக்கும் பின்னர் ஐரோப்பிய அடக்குமுறைக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியது. இதனால் போர் புரிவது இஸ்லாமியருக்கு தவிர்க்க முடியாத காரணியாக மாறியது. இதன் மனோபாவமே பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி அடிக்கடி ஏற்பட காரணமாக உள்ளது.
தென்னாசியாவில் இந்தியாவின் தலைமையும் அதன் இராணுவ ஆற்றல் பலமான ஒன்றாக காணப்பட அதனை முறியடிக்க ஏனைய தென்னாசிய நாடுகள் குறிப்பாக பாகிஸ்தான் தனது இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய ஏற்பட்டது. இதுவும் இந்த நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்பட வழிவகுத்தது எனலாம்.


இராணுவ ஆட்சியின் பின்னணி
பாகிஸ்தான் சுதந்திரமடைந்தவுடன் இந்தியாவைப்போல பாகிஸ்தானையும் ஜனநாயக அரசாக்கும் எண்ணம் பாகிஸ்தான் ஸ்தாபகரான ஜின்னாவிடம் காணப்பட்டது. ஆனாலும் அவர் இறக்கும் வரை உறுதியான அரசியலமைப்பு வரைய முடியாத நிலையில், அவரது மரணத்துக்குப் பின்னர் ஜனநாயக அரசியலில் தளம்பல் ஏற்பட ஆரம்பித்தது. 1952களில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட இந்து, முஸ்லிம் கலவரத்தை அடக்க இராணுவ சட்டமும், அவசரகாலச் சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் முஹம்மது அலி இன்  அமைச்சரவையால் எடுக்கப்பட்ட இம்முடிவு இராணுவத்தின் ஆட்சிக்குரிய முதல்படியாக அமைந்தது. இதன் பின்பு இராணுவ ஜெனரல் அய்யூப்கான் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட நிகழ்வு இராணுவ வீரர் ஒருவர் அரசியலில் ஆட்சியுரிமை பெற்றதாக வெளிப்படுத்தியது. 1956களில் இராணுவ செல்வாக்குடைய அரசியலில் தலைவர் மிர்ஷா ஜனாதிபதியாக பதவியேற்றமை பாகிஸ்தானில் மேலும் இராணுவ பரிமாணம் அரசியலில் பலமடைய வழிவகுத்தது எனலாம்.
மிர்ஷா அரசியல்வாதிகளை விட இராணுவத்தினர் கண்ணியமானவர்கள் என்பதனை மக்கள் மத்தியில் உணர்த்துவதற்கு முற்பட்டார். 1956இல் அப்போதைய பிரதமாரான சொரவ்ராடியின் செல்வாக்கு எழுச்சியடைவதைக் கண்டு அஞ்சிய மிர்ஷா அவரது ஆட்சியை அகற்றினார். அய்யூப்கானுடன் நெருக்கமான உறவைக்கொண்ட மிர்ஷாவின் ஆட்சியில் மேற்கு, கிழக்கு பாகிஸ்தானிடையே தீவிர முரண்பாடு உருவாகிக்கொண்டிருந்தது. மேற்கு, கிழக்கு பாகிஸ்தானிலும் விவசாயிகளது ஆயுதப்புரட்சிகள் ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் நிற்காது நகரத் தொழிலாளர்களின் உதவியுடன் பாகிஸ்தானிய நகரங்களையும் அமைதி இழக்கச் செய்தனர். இக்குழப்பகரமான சூழலில் மேலும் ஒரு நெருக்கடி பாகிஸ்தானின் ஐக்கியத்துக்கு சவாலாக அமைந்தது. அதாவது பாகிஸ்தானை ஆட்சி செய்த முஸ்லிம் லீக் கட்சியின் செல்வாக்கு சரிந்து கிழக்கு பாகிஸ்தானிய அரசியல் கட்சியான அவாமிலீக் கட்சியிடம் கிழக்கு பாகிஸ்தான் முழுவதன் ஆட்சி அதிகாரமும் கைமாறும் நிலை ஏற்பட்டது. இதனை எவ்வகையிலும் தடுத்து நிறுத்த வேண்டுமென மேற்கு பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் விரும்பியது.
இந்நெருக்கடி காலத்தை பயன்படுத்திய ஜெனரல் அய்யூப்கான் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வானது இராணுவத்தை பாகிஸ்தான் அரசியலில் இருந்து பிரிக்க முடியாத நிலைக்கு இட்டுச்சென்றது.

இராணுவ ஆட்சியின் தாக்கங்கள்
பாகிஸ்தான் இராணுவமானது மிக நீண்ட காலமாக பாகிஸ்தானின் அதிகார நிறுவனமாக இருந்து வருகின்றது. இங்கு 60 வருட காலத்தில் 4 மிக முக்கிய இராணுவ ஆட்சி இடம்பெற்றுள்ளது. சிவிலியன்கள் ஆட்சிக்காலத்திலும் இராணுவத்தின் செல்வாக்கு சமுதாயத்தில் பரவியிருந்தது. நாட்டின் தந்தை அலி ஜின்னாவின் காலத்தில் மட்டும்தான் (1947) சிவிலியன்கள் தலைமையிலான ஒரு குடியரசு அரசாங்கம் காணப்பட்டது ஆனாலும் 1958இல் முதல் இராணுவப்புரட்சி நடைபெற்று ஜெனரல் அய்யூப்கான் ஆட்சிக்கு வந்தார். அதனைத்தொடர்ந்து யஹ்யாகான் 1969இலும் ஜியா உல்ஹக் 1977இலும் ஜெனரல் பர்வேஸ்முஷாரப் 1999-2008இலும் இராணுவ ஆட்சியை மேற்கொண்டனர். ஒவ்வருவரின் இராணுவ ஆட்சியிலும் மிகப்பெரிய வினைத்திறனற்ற சிதறிய சிவிலியன் அரசாங்கம் ஏற்பட்டது. இராணுவ ஆட்சியாளர்கள் தமது புரட்சியையும்,தலைமையையும் நியாயப்படுத்தும் வகையில் காரணங்களைத்தேட முயற்சித்தனர். நாட்டை காப்பாற்றுதல் என்ற பெயரில் திறமையற்ற ஆட்சியை பிரயோகித்தனர்.
இராணுவத்திற்கு நெறுக்கமாக Inter service Intelligence Agency (ISI), Intelligence Bureau (IB), Military Agencies (MI) உருவாக்கப்பட்டு ஆட்சியில் செல்வாக்குச்செழுத்தியது. இராணுவ ஆட்சியாளர்கள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையை (Executive Presidential Rule System) பின்பற்றுகின்றனர். இராணுவத் தலைமையிடம் அரசியல் பலம் குவிந்திருக்கும்போது மக்களும் அரச சார்பற்ற அமைப்புகளும், வெளிநாட்டு அரசாங்கங்களும் இராணுவ ஆட்சிக்கு உதவி அளிப்பது தவிர்க்க முடியாத அம்சமாகவே அமைகின்றது.
1962இல் அய்யூப்கான் இராணுவஆட்சியை அறிமுகப்படுத்தி யாப்பு மற்றம் செய்து அதிகாரத்தை ஒருமுகப்படுத்தினார். மேலும் அடுத்த ஜெனரல் ஆக யஹ்யாகான் ஐ நியமிக்க கிழக்கு பாகிஸ்தானில் (பங்களாதேஷ்) சமுக, பொருளாதார, அரசியல் பங்கேற்பில் சமத்துவமின்மைக்கு எதிராக புரட்சிகள் வெடித்தன. 1971 யுத்தத்தின் பின் கிழக்கு பாகிஸ்தான் தனி நாடக பிரிந்து சென்றது. நீதித்துறையில் இராணுவத்தின் விருப்பமே பிரதிபலித்தது. ஜியாஉல்ஹக் அவருடைய Provisional Constitution Order (PCO) மூலம் பழைய Supreme Courte Judges நீக்கப்பட்டு புதியவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். முஷாரபின் ஆட்சியிலும் இது இடம்பெற்றது மேலும் இவரது ஆட்சியில் பாகிஸ்தான் பிரிவினை ஏற்படவும், பொருளாதார தேக்கம், ஜிஹாதிய குழுக்களின் அச்சுறுத்தல் என்பன ஏற்பட்டன.
ஜியாஉல் ஹக் இன் நீண்டகால ஆட்சியில் (1977-1985) அமெரிக்காவின் செல்வாக்கு பாகிஸ்தானில் அதிகமாக காணப்பட்டது. இராணுவத்தினர் பலர் பயிற்சிக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டனர். இதனால் அவர்களிடையே Americanization உருவானது.  Cold War காலத்திலும் தற்போதைய Global War on Terror இலும் பாகிஸ்தான் இராணுவம் வெளிநாட்டு உதவியை முதன்மையாகப்பெற்றது. ஆனாலும் 1989-2001 காலப்பகுதியில் Nuclear Program, Constitutional Crisis and State Sponsorship of Terrorism என்பவற்றுக்காக பாகிஸ்தான் பல சர்வதேச அழுத்தங்களிற்கு காரணமாகியது. 2001 இலிருந்து அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத Network ஐ தோற்கடிக்க 10-12billion $ வழங்கி வருகின்றது. இதனால் ஏற்பட்ட அமெரிக்க செல்வாக்கு தற்காலத்தில் பாகிஸ்தான் ஆல்புலத்தில் அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு காரணமாக உள்ளது.
பாகிஸ்தான் இராணுவ ஆட்சியில் இராணுவத்திற்கு ஓத்துப்போகாத மக்கள் தலைவனை நீக்கும் அதிகாரம், தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இராணுவத்திடம் காணப்பட்டது.       மேலும் தனது சொந்த நாட்டுக்குள் மட்டுமன்றி காஸ்மீர், ஆப்கானிஸ்தான் போன்ற பிரதேசத்திலும் தமது இராணுவ செல்வாக்கை நிலைப்படுத்த சில கிளர்சிக்குழுக்களை (proxy Agent) வைத்திருந்தனர். இராணுவ ஆட்சியில் நிர்வாகம் ஊழல் நிரம்பியதாக இருந்தாலும் Hierarchy, Discipline அங்கு காணப்பட்டது. பாகிஸ்தானின் Military Scholar Hasan Askari Rizvi கூறும்போது “அரசாங்கத்தின் சில விடயங்கள் இராணுவ மேற்பார்வை இல்லாமல் விவாதிக்கப்படவில்லை என்கிறார் அவை Kashmir Crisis, Pakistan’s Nuclear Program, Foreign policy, Defense Spending, perk for military officers and International military Decisions என்பனவாகும்.”  இவற்றை நோக்கும் போது இராணுவத்தின் செல்வாக்கு பாகிஸ்தானில் எவ்வாறு காணப்பட்டிருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
“பாகிஸ்தானில் இராணுவம் மிகமுக்கியமான நிறுவனமாகவும், ஒற்றுமை, தேசிய அடையாளத்திற்கு ஆதாரமாகவும் உள்ளதோடு மட்டுமன்றி முரண்பாடு, உள்ளக வன்முறை, சமத்துவமின்மை, அரசியலமைப்பின் தோல்வி என்பவற்றுக்கும் அவர்களே காரணம்” என Pakistan Expert Steve Coll குறிப்பிடுகிறார். ஆனாலும் முற்றுமுழுதாக இராணுவ ஆட்சி கேடு நிறைந்ததாக இருந்தது என்று கூற முடியாது. இராணுவ ஆட்சியை மக்கள் வரவேற்றதுடன் நாட்டின் அபிவிருத்தியிலும் இராணுவம் பங்கேற்றது. அவற்றை இனி நோக்குவோம்.

இராணுவமும் அபிவிருத்தியும்
இராணுவ ஆட்சிக்காலத்தில் பொருளாதார, அரசியல், சமூகநல கொள்கைகளில் இராணுவம் உள்வாங்கப்பட்டது. பாகிஸ்தான் இராணுவம் சொந்தமாக 5 மிகப்பெரிய வர்த்தகத்தை Public & Private Sector இல் நடத்தியது. அவை Multinational Companies என்பவற்றுக்கு பொறுப்பாக இருந்தது, Factories, Hospital, Banking, Land farming, Industries, திறந்த சந்தையில் வாங்குதல், விற்றல்(real estate) என்பனவாகும். மேலும் இராணுவம் வருட Budgetஇல் 4Billion அமெரிக்க டொலர்களை 650,000 படைவீரர்களுக்காக செலவிட்டது. இராணுவத்தில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்கள் அரச சிவில்சேவையில் இணைக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் இராணுவம் எப்போதும் பாகிஸ்தானின் தேசிய நலனிலும், தேசிய பாதுகாப்பிலும் (The Guardian of the national interest) அக்கறை செலுத்துவதினாலேயே இராணுவத் தலையீடுகள் இலகுவானதாகவும் மக்களின் விருப்புகளை பிரதிலிப்பதாகவும் அமைந்து விடுகின்றது. பிரபல அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகள் குறிப்பிடும்போது இராணுவ சமூகத்துக்கு அடிப்படையான தேவைகளை நிறைவு செய்யும் கலாசாரத்தை வெளிப்படுத்துவதுடன் இராணுவ பரிமாணத்தையும் உறுதியான அரசியலையும், அரசாங்கத்தையும் கொண்டிருகின்றது மட்டுமன்றி இராணுவம் சிவில் கட்சிகளை அமைத்துப் பொருளாதார அபிவிருத்திகளையும் சமூகத்தில் ஏற்படுத்துகின்றது.
இராணுவத்தளபதி ஜியாஉல்ஹக் காலத்தில் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார, இராணுவ துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டதுடன், மத ஒருமைப்பாடும், அரசியல் உறுதிப்பாடும் முன்னேற்றம் அடைந்து காணப்பட்டது. இராணுவ ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானில் அரசியல் உறுதிப்பாடு மட்டுமன்றி பலமான பொருளாதாரம், மத ஒருமைப்பாடு, இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியும் அடைந்தது. பாகிஸ்தானிய மக்களின் உணர்வுகளில் ஜியாஉல்ஹக் ஏனைய தளபதிகளை விட அதிகம் இடம்பிடித்தவராக விளங்கினார். பாகிஸ்தானின் தேச நிர்மாணத்திற்கு அவர் ஆற்றிய பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. 1984ஆம் ஆண்டு ஜியாஉல்ஹக் நடாத்திய பொதுத்தேர்தல் பாகிஸ்தானில் ஜனநாயகத்தை இராணுவ மயப்படுத்தியதில் அவர் வெற்றியும் கண்டார்.
ஜியாஉல்ஹக் இலகுவாக ஆட்சியைக் கைப்பற்ற பிரதமர் அலி பூட்டோவுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புணர்வே காரணம் ஆகும். பூட்டோவின் காலம் எதேச்சதிகாரமாகவே வர்ணிக்கப்படுகிறது. நாடு சிவில் யுத்தத்திலேயே மூழ்கியிருந்தது. தேசியப்பொருளாதாரம் நாசமாகிக் கொண்டிருந்தது. சாதாரண வாழ்கை நிலை தடைப்பட்டது. ஜனநாயகம் பெயரளவுக்கே அமுல்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்தது இதனால் மக்கள் இராணுவ ஆட்சியை வரவேற்பவர்களாக காணப்பட்டனர். இதிலிருந்து பாகிஸ்தானில்  இராணுவ ஆட்சியின் செல்வாக்கை அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை
பாகிஸ்தான் வரலாற்றில் இராணுவ ஆதிக்கம் என்பது பிரிக்கமுடியாத ஒன்றாக காணப்படுகிறது. இராணுவ ஆட்சி அங்கு பலவீனமான மக்கள் அரசை உருவாக்கியது, மக்கள் தலைவர்கள் அவமதிக்கப்பட்டனர். ஊழல் நிரம்பிய ஆட்சியும் மாநில பிளவுகளும் உருவாகின. சிறுபான்மையினர் ஆட்சியில் இருந்து வேறுபடுத்தப்பட்டனர். ஆனாலும் பாகிஸ்தான்  மக்களில் பெரும்பான்மையினர் இதனை விரும்பினர். ஏனெனில் ஜனநாயக தலைவர்களை இராணுவ ஆட்சியாளர்கள் தூக்கிலிடும் போதோ (அலி பூட்டோ) சிறையிருக்கும் போதோ (நவாஸ் ஷெரிப்) அதற்கு எதிராக மக்கள் பெரிதாக கிளர்ந்து எழவில்லை. மாறாக ஒரு சில மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர். இதனால் இராணுவத்தின் ஆட்சியே பாகிஸ்தானியருக்கு பொருத்தமானது எனக்கூறலாம்.
எவ்வாறாயினும் மக்கள் தலைவரை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு இராணுவம் ஆட்சி ஏற்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். மக்கள் தலைவர் பிழைவிடின் அதனை தட்டிக்கேட்டு திருத்தும் அதிகாரம் அரசியல் கட்சிகளுக்கும் அமுக்கக்குழுக்களுக்கும் பிரஜைகளுக்குமே உண்டு. அதனை இராணுவம் பொறுப்பேற்பது முறையற்றதாகும். ஆனால் இராணுவ ஆட்சியை விரும்பும் மக்கள் உள்ள நாட்டில் இந்த ஒழுக்கம் விதிவிலக்காகும். இவ்வாரே பாகிஸ்தான் மக்களின் மனோநிலையும் காணப்படுகிறது.   
     


   ஆக்கம்:- 
   மீஸா பேகம்










  

Comments

Popular posts from this blog